என் மலர்
செய்திகள்

பாலஸ்தீனம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
இஸ்ரேல் வீரரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Israelblowsup #Palestinianhome #WestBank #WestBankrefugeecamp
ரமல்லா:
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக வெஸ்ட் பேங்க் பகுதியை சேர்ந்த இஸ்லாம் அபு ஹமித் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், வெஸ்ட் பேங்க் பகுதியின் தெற்கே அல்-பைரே என்னுமிடத்தில் உள்ள அம்அரிஅகதிகள் குடியிருப்பை நேற்றிரவு ஆயிரக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த சுமார் 400 பேரை கைது செய்தனர்.
மேலும், அப்பகுதியில் அபு ஹமித் குடும்பத்துக்கு சொந்தமான 4 மாடிகள் கொண்ட வீட்டை வெடி வைத்து, தகர்த்து தரைமட்டமாக்கினர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் தற்போது பாலஸ்தீன செம்பிறை தொண்டு நிறுவனத்தின் ஆதரவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இப்பகுதிக்கு வந்த ராணுவத்தினரை தடுத்து நிறுத்தும் முயற்சியின்போது பாலஸ்தீனியர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு பத்திரைகையாளர் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர். #Israelblowsup #Palestinianhome #WestBank #WestBankrefugeecamp
Next Story






