என் மலர்

  நீங்கள் தேடியது "jerusalem"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் நாடும் தனது தலைமை பிரேசில் தூதரகத்தை இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. #OIC #Brazildecision #Jerusalemembassy #Brazilembassy
  இஸ்தான்புல்:

  அமெரிக்காவின் நட்புநாடான இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிவ் இருந்து வருகிறது. இஸ்லாமியர்களும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் உரிமை கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக மாற்றும் வகையில் அமெரிக்கா சமீபத்தில் ஜெருசலேம் நகரில் தனது தலைமை தூதரகத்தை கடந்த ஆண்டு திறந்துள்ளது.

  அமெரிக்காவை பின்பற்றி சில ஐரோப்பிய நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகருக்கு மாற்ற தீர்மானித்தன.

  அவ்வகையில், பிரேசில் நாடும் தங்களது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றும் முடிவை அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் கூட்டமைப்பு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

  தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் பிரேசில் நாட்டின் அறிவிப்பு சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக இந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பிரேசில் நாட்டு அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள ஜெய்ர் போல்சோனாரோ இந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  1969-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டமைப்பில் 53 இஸ்லாமிய நாடுகள் உள்பட ஒட்டுமொத்தமாக சுமார் 180 கோடி மக்கள்தொகையை 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன. #OIC #Brazildecision #Jerusalemembassy #Brazilembassy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார். #Jerusalem #BenjaminNetanyahu
  ரியோ டி ஜெனிரோ:

  யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.
   
  எனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா, பராகுவே நாட்டின் தூதரகங்கள் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.  இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார்.

  இதுதொடர்பாக, பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராக தேர்வான ஜயிர் போல்ஸ்னோரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள பிரேசில் தூதரகம் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

  பிரேசில் அதிபரின் இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். #Jerusalem #BenjaminNetanyahu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெருசலேத்திற்கு புனித புனித பயணம் செல்பவர்கள் அரசின் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  விழுப்புரம்:

  ஜெருசலேத்திற்கு புனித புனித பயணம் செல்பவர்கள் அரசின் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு வருகிற 10-ந் தேதிக்குள் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807 அண்ணா சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
  விருதுநகர்:

  கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. புனித பயணம் ஜூலை மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்‘ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 807, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு வருகிற 6-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா, கவுதமாலாவை தொடர்ந்து பரகுவே நாடும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை இன்று திறந்தது. #Paraguay #Embassy
  ஜெருசலேம்:

  இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த 14-ம் தேதி திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாட்டின் தூதரகம் இங்கு 16-ம் தேதி திறக்கப்பட்டது.

  இதைதொடர்ந்து, மூன்றாவதாக பரகுவே நாடும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை இன்று திறந்தது.

  இந்த திறப்பு விழாவில் பரகுவே நாட்டின் அதிபர் ஹோராக்கியோ கார்டெஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இரு நாடுகளை சேர்ந்த மந்திரிகள், உயரதிகாரிகள் பங்கேற்று உரையாற்றினர். #Israel #Paraguay #Embassy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெருசலேம் நகரில் அமெரிக்கா தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கான தூதரை திரும்பப்பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. #Gaza #USEmbassyJerusalem #Palestinianenvoyrecalled

  ரமல்லா:

  இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

  இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

  இதற்கிடையில், நேற்று முன்தினம் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 59 பேர் உயிரிழந்தனர். 1,200  பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 110 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதரை திரும்பப்பெறுவதாக பாலஸ்தீன அதிபர் மொகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதர் ஹுசாம் சோம்லாட் பாலஸ்தீனத்துக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaza #USEmbassyJerusalem #Palestinianenvoyrecalled
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெருசலேம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்படும் நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem

  ஜெருசலேம்:

  இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரக அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.

  இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பலர் ஜெருசலேம் நகரில் முகாமிட்டுள்ளனர்.

  வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தவாறு திறப்பு விழாவின்போது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமெரிக்க அதிபர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேதன்யாகு கூறுகையில், அமெரிக்காவை தொடர்ந்து தங்களது தூதரகங்களை ஜெருசலேம் நகரில் திறக்க விருப்பம் தெரிவித்துள்ள கவுதமாலா, பரகுவே நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோன்ற முடிவை விரைவில் சில நாடுகள் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

  இஸ்ரேல் நாட்டின் தலைநகராக இனி ஜெருசலேம் இருக்கும் என்பதால் உலகில் உள்ள இதர நாடுகளும் தங்களது தூதரகங்களை இங்கு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். #IsraeliPM #BenjaminNetanyahu #USembassy #Jerusalem
  ×