search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "isreal"

    பெண்கள் பாடிய பாடல்களை ஆண்கள் கேட்கக்கூடாது என்ற பழமைவாத சிந்தனையுடன் பெண்கள் பாடல்களை ஒலிபரப்பாமல் இருந்த யூத ரேடியோவுக்கு சுமார் ரூ.2 கோடி அபராதம் விதித்து இஸ்ரேல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Isreal #JewRadio
    டெல் அவிவ்:

    யூத நாடான இஸ்ரேலில் கோல் பரமா (Kol Barama) என்ற ரேடியோ இயங்கி வருகிறது. யூத மத பழமைவாத கருத்துக்களை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் இந்த ரேடியோ கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் 2011 வரை பெண்களின் குரலை ஒலிபரப்பவே இல்லை.

    பெண்களின் பாடல்களை ஆண்கள் கேட்க கூடாது என்ற பழமைவாத கருத்தின் அடிப்படையில் ரேடியோ நிறுவனம், பெண்களின் குரல்களை கூட ஒலிபரப்பாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து, 2011-ம் ஆண்டில் பெண்கள் அமைப்புகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    பெண்களின் குரல்களை கேட்ட வாடிக்கையாளர்கள் விருப்பப்படவில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரிலே பெண்களின் குரல்கள் ஒலிபரப்பவில்லை என ரேடியோ நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. எனினும், பின்னர் 2013-ம் ஆண்டில் இருந்து பெண் தொகுப்பாளர்களை பணியில் சேர்த்தது. ஆனாலும், பெண்கள் பாடிய பாடல்களை தற்போது வரை ஒலிபரப்பவில்லை. 

    இந்நிலையில், பெண்கள் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கோல் பரமா ரேடியோவுக்கு 1 மில்லியன் ஷெகெல்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
    அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Iran #Isreal
    டெல்அவிவ்:

    அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரபு நாடுகளில் ஒன்றான ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானுக்கு நெருக்கடி கொடுத்தன.

    இதையடுத்து ஈரான் சற்று இறங்கி வந்தது. இது சம்பந்தமாக ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் முறித்து கொண்டன.

    இதைத்தொடர்ந்து ஈரான் அணு செறிவூட்டல் திட்டத்தை தீவிரமாக்கி உள்ளது. இதன் மூலம் அணு குண்டுகளை ஈரானால் தயாரிக்க முடியும்.

    ஈரானை பொறுத்தவரை அதன் முக்கிய எதிரி நாடாக இஸ்ரேல் உள்ளது. அந்த அணுகுண்டுகளை இஸ்ரேலுக்கு எதிராகத்தான் ஈரான் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய இஸ்ரேல் முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஏற்கனவே சதாம் உசேன் அதிபராக இருந்த காலத்தில் ஈராக் நாடு அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனால் தங்களுக்குதான் ஆபத்து என கருதிய இஸ்ரேல் ரகசியமாக போர் விமானங்களை அனுப்பி ஈராக் அணு உலைகளை முற்றிலும் தகர்த்தது.

    அதேபோல் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியையும் முறியடிக்க இஸ்ரேல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


    இது சம்பந்தமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறும் போது, ஈரான் தயாரிக்க திட்டமிட்டுள்ள அணுகுண்டுகள் எங்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, நாங்களும் உரிய பாதுகாப்பு நடவடிகைகளை மேற்கொள்வோம் என்று கூறி உள்ளார்.

    ஒரு வேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பெரும் போராக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. #IranNuclearBomb #IranNuclearDeal #Iran #Isreal
    அமெரிக்கா, கவுதமாலாவை தொடர்ந்து பரகுவே நாடும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை இன்று திறந்தது. #Paraguay #Embassy
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த 14-ம் தேதி திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாட்டின் தூதரகம் இங்கு 16-ம் தேதி திறக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, மூன்றாவதாக பரகுவே நாடும் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை இன்று திறந்தது.

    இந்த திறப்பு விழாவில் பரகுவே நாட்டின் அதிபர் ஹோராக்கியோ கார்டெஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இரு நாடுகளை சேர்ந்த மந்திரிகள், உயரதிகாரிகள் பங்கேற்று உரையாற்றினர். #Israel #Paraguay #Embassy
    ×