search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nuclear bomb"

    இந்தியா தீபாவளிக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என பிரதமர் மோடி எச்சரித்த நிலையில் பாகிஸ்தான் என்ன பெருநாள் கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறது? என மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். #Pakistannuclearbomb #nuclearbombforEid #MehboobaMufti #Modi
    ஸ்ரீநகர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 'எங்களிடம் அணுகுண்டு உள்ளது என்று பாகிஸ்தான் மிரட்டினால், நாங்கள் தீபாவளி கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறோம்? என ஆவேசமாக கேட்டார்.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி  மெகபூபா முப்தி, ‘பாகிஸ்தான் மட்டும் என்ன (ரம்ஜான் அல்லது பக்ரீத்) பெருநாள் கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறது? என பிரதமர் மோடிக்கு இன்று எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘இந்தியா தீபாவளிக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என்றால், அதேபோல் பாகிஸ்தானும் பெருநாள் (ஈத்) கொண்டாட்டத்துக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என பொருள்படும்.

    பிரதமர் மோடி மிகவும் தாழ்ந்துப்போய் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் பிரசங்கங்களை ஏன் செய்கிறார்? என்பது தெரியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில், ‘உண்மையான தேசபக்தர் என்ற நற்பெயருக்காக காந்தியின் இந்தியா ரத்தவெறி கொண்டு அலைவதாக பிறர் கேலியாக விமர்சனம் செய்ய இவரைப்போல் (மோடி) யாரும் ஆர்வப்பட மாட்டார்கள்’ என தெரிவித்துள்ளார். #Pakistannuclearbomb #nuclearbombforEid #MehboobaMufti #Modi
    அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Iran #Isreal
    டெல்அவிவ்:

    அணுகுண்டுகளை தயாரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் ஈரானுக்கு ஐ.நா. சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எதிரிநாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரபு நாடுகளில் ஒன்றான ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானுக்கு நெருக்கடி கொடுத்தன.

    இதையடுத்து ஈரான் சற்று இறங்கி வந்தது. இது சம்பந்தமாக ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் முறித்து கொண்டன.

    இதைத்தொடர்ந்து ஈரான் அணு செறிவூட்டல் திட்டத்தை தீவிரமாக்கி உள்ளது. இதன் மூலம் அணு குண்டுகளை ஈரானால் தயாரிக்க முடியும்.

    ஈரானை பொறுத்தவரை அதன் முக்கிய எதிரி நாடாக இஸ்ரேல் உள்ளது. அந்த அணுகுண்டுகளை இஸ்ரேலுக்கு எதிராகத்தான் ஈரான் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய இஸ்ரேல் முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஏற்கனவே சதாம் உசேன் அதிபராக இருந்த காலத்தில் ஈராக் நாடு அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனால் தங்களுக்குதான் ஆபத்து என கருதிய இஸ்ரேல் ரகசியமாக போர் விமானங்களை அனுப்பி ஈராக் அணு உலைகளை முற்றிலும் தகர்த்தது.

    அதேபோல் ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியையும் முறியடிக்க இஸ்ரேல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


    இது சம்பந்தமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறும் போது, ஈரான் தயாரிக்க திட்டமிட்டுள்ள அணுகுண்டுகள் எங்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, நாங்களும் உரிய பாதுகாப்பு நடவடிகைகளை மேற்கொள்வோம் என்று கூறி உள்ளார்.

    ஒரு வேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பெரும் போராக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. #IranNuclearBomb #IranNuclearDeal #Iran #Isreal
    ×