search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mehbooba"

    இந்தியா தீபாவளிக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என பிரதமர் மோடி எச்சரித்த நிலையில் பாகிஸ்தான் என்ன பெருநாள் கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறது? என மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். #Pakistannuclearbomb #nuclearbombforEid #MehboobaMufti #Modi
    ஸ்ரீநகர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 'எங்களிடம் அணுகுண்டு உள்ளது என்று பாகிஸ்தான் மிரட்டினால், நாங்கள் தீபாவளி கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறோம்? என ஆவேசமாக கேட்டார்.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி  மெகபூபா முப்தி, ‘பாகிஸ்தான் மட்டும் என்ன (ரம்ஜான் அல்லது பக்ரீத்) பெருநாள் கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறது? என பிரதமர் மோடிக்கு இன்று எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘இந்தியா தீபாவளிக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என்றால், அதேபோல் பாகிஸ்தானும் பெருநாள் (ஈத்) கொண்டாட்டத்துக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என பொருள்படும்.

    பிரதமர் மோடி மிகவும் தாழ்ந்துப்போய் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் பிரசங்கங்களை ஏன் செய்கிறார்? என்பது தெரியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில், ‘உண்மையான தேசபக்தர் என்ற நற்பெயருக்காக காந்தியின் இந்தியா ரத்தவெறி கொண்டு அலைவதாக பிறர் கேலியாக விமர்சனம் செய்ய இவரைப்போல் (மோடி) யாரும் ஆர்வப்பட மாட்டார்கள்’ என தெரிவித்துள்ளார். #Pakistannuclearbomb #nuclearbombforEid #MehboobaMufti #Modi
    இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தானி தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய விமானப்படை விமானி அபினந்தனை பாக். ராணுவத்தினர் கைது செய்தனர். அவர் தங்களிடம் இருப்பது போன்ற வீடியோவை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டது.

    இதையடுத்து, பாகிஸ்தானிடம் சிக்கிய அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள்  வலியுறுத்தின.

    இதற்கிடையே, நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என்ற பாக். பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பை வரவேற்கிறேன். இது பேச்சுவார்த்தைக்கான முதல் படியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், முன்னாள் முதல் மந்திரியான உமர் அப்துல்லாவும் தனது சமூக வலைதள பக்கத்தில், அபினந்தன் விடுதலை குறித்த இம்ரான்கான் அறிவிப்பை வரவேற்றுள்ளார். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
    ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார். #Mehbooba #PDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையில் நடைபெற்றுவந்த மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு அங்கு தற்போது கவர்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி எங்கள் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆபத்தான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

    1987-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின்னர் எங்கள் கட்சியை பிளவுப்படுத்த நினைத்த முயற்சியால்தான் சையத் சலாவுதீன் (தற்போது பாகிஸ்தானில் வாழும் ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்) முஹம்மது யாசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் உருவானார்கள்.

    இதேபோல், இப்போதும் எங்கள் கட்சியை உடைக்க டெல்லியில் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    எல்லா குடும்பங்களில் உள்ளதுபோல் எங்கள் கட்சிக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அது பேசி தீர்க்கப்படும். டெல்லியின் தலையீடு இல்லாமல் எந்த பிளவும் இங்கு ஏற்பட முடியாது. அப்படி பிளவுப்படுத்துவதன் மூலம் மேலும் ஒரு பயங்கரவாதியை உருவாக்க முடியாது.

    காஷ்மீர் வாக்காளர்களின் ஓட்டுகளை கவர்வதற்காக டெல்லியால் உருவாக்கப்படும் ஒரு கட்சியின் அழிவுக்காக இங்குள்ள மக்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

    என் கட்சி பலமாக  உள்ளது. எங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை நாங்களே தீர்த்து கொள்வோம். 1987-ம் ஆண்டு ஐக்கிய முஸ்லிம் முன்னணியை ஒடுக்க நினைத்ததுபோல் எந்த முயற்சி நடந்தாலும் அதன் எதிர்வினைகள் மிகவும் ஆபத்தானதாக அமையும் எனவும் மெகபூபா எச்சரித்தார். #Mehbooba #PDP  
    ஜம்மு காஷ்மீரில் நேற்று பேசிய அமித் ஷா முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மெகபூபா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். #MehboobaMufti #AmitShah
    ஸ்ரீநகர்:

    மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று தொண்டர்களிடையே பேசினார்.

    அப்போது பேசிய அவர், லடாக் ஜம்மு இடையே எவ்வித வளர்ச்சியும் இல்லாததால் தான் நாங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி அவர் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தலைவர் அமித் ஷா வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2014-ம் ஆண்டு ஜம்மு லடாக் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டுமே அங்கு வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், அப்பகுதிகளில் எவ்வித வளர்ச்சியுமே இல்லை என கூறமுடியாது எனவும் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.



    இதையடுத்து, சர்ச்சைக்குரியா கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கினை சி.பி.ஐ வசம் ஒப்படைக்காமல், அதே சமயம், இரு சமூகத்தாருக்கு இடையே எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத அளவுக்கு அந்த பிரச்சனைகளை முதல்மந்திரியாக தாம் கையாண்டதாக மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

    மேலும், பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை மிரட்டிய புகாரில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரை அந்த கட்சியின் தலைமை என்ன செய்யப்போகிறது? என்றும், கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் அமைச்சர்களின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். #MehboobaMufti #AmitShah
    ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #MehboobaMufti
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.



    இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஜம்மு காஷ்மீரின் முதல்வர் மெகபூபா முப்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவர் உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்’ என மோடி பதிவிட்டுள்ளார். #modiwishes #MehboobaMufti
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிரதமர் தொடங்கி வைத்த கிஷன்கங்கா மின்சார உற்பத்தி திட்டத்தின்போது மாநில கவர்னரை முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிடாததால் பரபரப்பு ஏற்பட்டது. #Mehbooba #pmmodi #governor
    ஸ்ரீநகர்:

    ஒருநாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    ஸ்ரீநகரில் 330 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கிஷன்கங்கா மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த மோடி, அதை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.

    இந்த விழா மேடையில் பேசிய முதல் மந்திரி மெகபூபா முப்தி, மரியாதை மற்றும் சம்பிரதாயத்தின்படி, அங்கு அமர்ந்திருந்த கவர்னர் என்.என். வோரா பெயரை குறிப்பிட மறந்து விட்டார். பின்னர், அவரது பெயர் விடுபட்டுப் போனதை உணர்ந்த அவர், தனது பிழையை கவர்னர் பொறுத்தருள வேண்டும் என தனது பேச்சின்போது குறிப்பிட்டார். #Mehbooba #pmmodi #governor
    ×