என் மலர்
செய்திகள்

பிரதமர் இருந்த மேடையில் கவர்னரை மறந்த காஷ்மீர் முதல் மந்திரி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிரதமர் தொடங்கி வைத்த கிஷன்கங்கா மின்சார உற்பத்தி திட்டத்தின்போது மாநில கவர்னரை முதல் மந்திரி மெகபூபா முப்தி குறிப்பிடாததால் பரபரப்பு ஏற்பட்டது. #Mehbooba #pmmodi #governor
ஸ்ரீநகர்:
ஒருநாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ஸ்ரீநகரில் 330 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கிஷன்கங்கா மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த மோடி, அதை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.
இந்த விழா மேடையில் பேசிய முதல் மந்திரி மெகபூபா முப்தி, மரியாதை மற்றும் சம்பிரதாயத்தின்படி, அங்கு அமர்ந்திருந்த கவர்னர் என்.என். வோரா பெயரை குறிப்பிட மறந்து விட்டார். பின்னர், அவரது பெயர் விடுபட்டுப் போனதை உணர்ந்த அவர், தனது பிழையை கவர்னர் பொறுத்தருள வேண்டும் என தனது பேச்சின்போது குறிப்பிட்டார். #Mehbooba #pmmodi #governor
Next Story






