என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அபினந்தன் விடுவிக்கப்படுவார் என்ற இம்ரான்கான் அறிவிப்புக்கு மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா வரவேற்பு
Byமாலை மலர்28 Feb 2019 1:36 PM GMT (Updated: 28 Feb 2019 1:36 PM GMT)
இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானி தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய விமானப்படை விமானி அபினந்தனை பாக். ராணுவத்தினர் கைது செய்தனர். அவர் தங்களிடம் இருப்பது போன்ற வீடியோவை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டது.
இதையடுத்து, பாகிஸ்தானிடம் சிக்கிய அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.
இதற்கிடையே, நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவித்ததற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என்ற பாக். பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பை வரவேற்கிறேன். இது பேச்சுவார்த்தைக்கான முதல் படியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், முன்னாள் முதல் மந்திரியான உமர் அப்துல்லாவும் தனது சமூக வலைதள பக்கத்தில், அபினந்தன் விடுதலை குறித்த இம்ரான்கான் அறிவிப்பை வரவேற்றுள்ளார். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan #MehboobaMufti #OmarAbdullah
Next Story
×