search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "excavations"

    • அகழாய்வில் பண்டையகால பொருட்கள் கிடைத்தன.
    • யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    25 ஏக்கர் பரப்பளவில் வைப்பாற்றின் கரையில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த வரலாறு குறித்து அறிவதற்காக கீழடி போன்று அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 அகழாய்வு குழிகள் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளன.

    இதில் ஏராளமான யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன்கள், விலை மதிப்பெற்ற சூது பவளம், பெண்கள் அணியும் தொங்கட்டான்கள், காதணிகள், கண்ணாடி பாசிமணிகள், சூடு மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    9-வது அகழாய்வு குழுவில் ஏராளமான சுடுமண்னால் செய்யப்பட்ட மண்பாண்ட பாத்திரங்கள், முதுமக்கள் தாழி, 40-க்கும் மேற்பட்ட சிறிய வடிவிலான குடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் முதுமக்கள் தாழி மற்றும் இந்த குடங்களை சேதமடையாமல் எடுப்பதற்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    முதுமக்கள் தாழி மற்றும் மண் குடங்களில் ஆராய்ச்சி செய்யும் போது எந்த காலத்தில் மக்கள் வசித்துள்ளார்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்களும் கிடைத்துள்ளன. விரைவில் உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் எடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியமாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதிப்புறு மனிதர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தென்காசி மாவட்ட முதல் மாவட்ட மாநாடு மதியழகன், சீதாலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட முதல் மாநாடு மற்றும் கலை இலக்கிய இரவு 2 நாட்கள் நடைபெற்றது. மருத்துவர் சுப்பராஜ் தலைமை தாங்கினார்.

    விருதுகள்

    நகராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரிஇசக்கியப்பன், எழுத்தாளர் நாறும்பூநாதன், கோமதிஅம்பாள் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனிச்செல்வம், சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன், வள்ளிநாயகம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    இதைத்தொடர்ந்து மதிப்புறு மனிதர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவர் அம்சவேணிசுப்பராஜ், டீக் கடை முருகன், பஞ்சர் சுப்பையா ஆகியோருக்கு மதிப்புறு மனிதர் விருதுகளை திரைக்கலைஞர் ரோகிணி வழங்கினார்.பின்னர் தொட்டுவிடும் தூரத்தில் வானவில் என்ற கவிதை நூலை அவர் வெளியிட தொழிலதிபர்கள் ஆ.வள்ளிராஜன், திவ்யா.எம்.ரெங்கன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    மாவட்ட மாநாடு

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தென்காசி மாவட்ட முதல் மாவட்ட மாநாடு மதியழகன், சீதாலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    நகர தலைவர் தண்டபாணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.நெல்லை மாவட்ட செயலர் வண்ணமுத்து மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.செயலர் அறிக்கையை மாவட்ட செயலர் பக்ருதீன்அலிஅகம்மது, கலை இலக்கிய அறிக்கையை செந்தில்வேல், பண்பாட்டு அறிக்கையை பிச்சுமணி ஆகியோர் வாசித்தனர்.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்துணைப் பொதுச் செயலரும், எழுத்தாளருமான உதயங்கர் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்திப் பின்னர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-

    தமிழக பண்பாட்டு வரலாற்றில் கலை இலக்கிய இரவு என்ற கலைநிகழ்வு புதிய கொடையாக உள்ளது.எனவே கலை இலக்கிய இரவை விடிய, விடிய நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் நம்முடைய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான வில்லிசை, பறையிசை, நாட்டார் இசை, கரகாட்டம் போன்ற கற்பிப் பிதற்காக கலை ஆசிரியர் பணி யிடங்களை உருவாக்க வேண்டும், வாசு தேவநல்லூர் இருகே திருமலாபுரத்தில் முதுமக்கள் தாழி போன்ற பண்டைய கால பொருள்கள் கிடைக்கப் பெற்றன.அந்த இடத்தில் தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்த வேண்டும், தென்காசி மாவட்டத்தில் இசை பயிற்சிப் பள்ளி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன. ஆத்தி விநயாகம் நன்றி கூறினார்.

    ×