மேற்கு கரையில் நிராயுதபாணியான 2 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் வீரர்கள் - வீடியோ வெளியாகி பரபரப்பு

அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.
மேற்கு கரையில் நிராயுதபாணியான 2 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் வீரர்கள் - வீடியோ வெளியாகி பரபரப்பு
Published on

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் நிராயுதபாணியான இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ மத்திய கிழக்கு ஊடங்களில் வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில், இஸ்ரேல் ராணுவம் ஒரு கேரேஜை புல்டோசரால் இடித்துக் கொண்டிருந்தது. அப்போது உள்ளிருந்து 2 ஆண்கள் கைகளை தூக்கியபடி வெளியே வந்தனர்.

தங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பதை காட்ட அவர்கள் அவ்வாறு செய்தனர். அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.

அப்போது மற்றொரு வீரர் அவர்களை சுட்டுக் கொன்றார். அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.

நிராயுதபாண்டியாக வந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றது போர் குற்றம் ஆகும்.

இஸ்ரேலிய இராணுவம் இறந்தவர்களை தேடப்படும் போராளிகள் என்று விவரித்துள்ளது. அவர்கள் வீரர்கள் மீது வெடிபொருட்களை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் ராணுவம் கூறியது.

இந்த செயலுக்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் ராணுவத்தைப் பாராட்டினார். பயங்கரவாதிகள் இறக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இது சர்வதேச சட்டத்தை மீறி செய்யப்பட்ட கொலை என்பதை பாலஸ்தீன பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com