என் மலர்tooltip icon

    உலகம்

    எகிப்து உடனான காசா எல்லையை நாளை முதல் திறந்து விடுகிறது இஸ்ரேல்
    X

    எகிப்து உடனான காசா எல்லையை நாளை முதல் திறந்து விடுகிறது இஸ்ரேல்

    • ஹமாஸ்க்கு எதிரான போரினால் கடந்த 2024-ல் இருந்து எல்லை மூடப்பட்டது.
    • ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்தவரின் உடல் பாகம் கிடைத்ததும், இஸ்ரேல் எல்லையை திறக்கிறது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால் கடந்த 2024-ம் ஆண்டு எகிப்து உடனான காசாவின் முக்கிய எல்லையை இஸ்ரேல் மூடியது. இந்த நிலையில் நாளை முதல் இந்த எல்லை (Rafah) திறக்கப்படும் என காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ள இஸ்ரேலிய இராணுவ அமைப்பு {கோகாட் (COGAT)} தெரிவித்துள்ளது.

    ஆனால் மக்களின் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்படுவது டிரம்பின் காசாவின் போர் நிறுத்தத் திட்டத்திற்கான முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் காவல்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் இந்த எல்லைப் பகுதியாக வெளியேறும் மற்றும் நுழையும் நபர்களை இஸ்ரேலும் எகிப்தும் சரிபார்க்கும்.

    காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அனுமதி பெற்று மீண்டும் காசா திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

    Next Story
    ×