என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு
    X

    காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு

    • காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.
    • காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    காசாவில் கடந்த அக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.

    காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, காவல் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.

    காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.

    காசா நகரில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

    ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக இந்த எல்லை திறக்கப்படுவது. சிகிச்சைக்குக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு இது ஒரு முக்கியமாக நிகழ்வாகும்.

    அக்டோபர் 10-ஆம் தேதி போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 509 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×