என் மலர்
நீங்கள் தேடியது "நார்வே பிரதமர்"
- 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டது.
- நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார்.
ஓஸ்லோ:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் 8 போர்களை நிறுத்தி உள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.
ஆனால், 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார்.
இதற்கிடையே, நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு நார்வே பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோர் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நோபல் அமைதிப் பரிசைப் பொறுத்தவரை அதிபர் டிரம்ப் உள்பட அனைவருக்கும் தெளிவாக விளக்கியுள்ளேன். அந்தப் பரிசு நார்வே அரசாங்கத்தால் வழங்கப்படுவது அல்ல. ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது. நார்வே, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் அறிவித்த வரி உயர்வுக்கு எங்கள் எதிர்ப்பை அவரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் எர்னா சோல்பெர்க் என்ற பெண் தலைவர் பிரதமராக உள்ளார்.
சமீபத்தில் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அந்தச் செய்தியில் அவர், “நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்” என கூறி உள்ளார்.
மேலும் “இனி வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் (பிறப்பு வீதம் குறைவாக இருந்தால்) நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்” எனவும் அவர் எச்சரித்தார்.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படக்கூடிய நார்வே, சுவீடன், டென்மார்க் , பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவாக உள்ளது. #NorwegianPM

நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நார்வே பிரதமருக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பின்னர், எர்னா சோல்பர்க், நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
நார்வே பிரதமருடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார்.
பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை எர்னா சோல்பர்க் சந்தித்து பேசினார். #PMModi #NorwegianPM #ErnaSolberg






