என் மலர்

  நீங்கள் தேடியது "foreign minister sushma swaraj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். #MonaccoPrince #PMModi #SushmaSwaraj
  புதுடெல்லி:

  மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் அரசுமுறை பயணமாக இந்தியாவில் நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.  மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று சந்தித்துப் பேசினார். இருதரப்பை சேர்ந்த அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான விசா விதிகள் குறித்தும் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

  மேலும், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் தில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. #MonaccoPrince #PMModi #SushmaSwaraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் மற்றும் ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார். #SushmaSwaraj
  புதுடெல்லி:

  நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.

  நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இன்று காலை இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

  இதேபோல், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஸ்பெயின் வெளியுறவு துறை மந்திரி ஜோசப் போரெல் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மாரிஸ் பெயின் ஆகியோரையும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார்.  அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

  சுஷ்மா சுவராஜை சந்தித்த பின்னர், நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். #SushmaSwaraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
  புதுடெல்லி:

  பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
   
  இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

  இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #PassportSewaKendra
  புதுடெல்லி:
   
  இந்திய வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் சுஷ்மா சுவராஜ். வெளிநாடுகளில் இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பான டுவிட்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் இந்திய தூதரகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருவது வழக்கம்.

  இந்நிலையில், அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டில் மொத்தம் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் 308 பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது 4 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

  எனவே, அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார். #SushmaSwaraj #PassportSewaKendra
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு அதிபர் வின் மிண்டை சந்தித்தார். #SushmaSwaraj #WinMyint
  நே பை தா:

  இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக விளங்கும் மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து, மணிப்பூர் ஆகியவை மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், மியான்மருடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

  இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு நேற்று சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

  இந்நிலையில், மியான்மர் அதிபர் வின் மிண்டை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்தார்.

  இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மியான்மர் அதிபர் வின் மிண்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

  மேலும், இந்த சந்திப்பின்போது, வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரக்கைன் மாகாணத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

  கடந்த டிசம்பரில் ரக்கைன் மாகாணத்திற்கு சுமார் 25 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #WinMyint
  ×