search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former PM nawaz sharif"

    1400 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய ஊழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவல் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. #Pakistanhousingscam #Shahbazsharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஷாபாஸ் ஷரிப். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தம்பியான இவர், நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராகவும், தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

    பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக பதவி வகித்தபோது ஷாபாஸ் ஷரிப்புக்கு பல ஊழல்களில் தொடர்பிருப்பதாக முன்னர் குற்றச்சாட்டு எழுந்தது.

    குறிப்பாக, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடுகளை கட்டித்தரும் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆஷியான் வீட்டுவசதி’ திட்டத்தில் ஏற்கனவே  ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததாகவும் இதன்மூலம்  ஊழல் செய்து பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவருக்கு எதிராக பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷாபாஸ் ஷரிப் பலத்த காவலுடன் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

    இதனை ஏற்ற நீதிபதி நஜமுல் ஹஸன் 10 நாள் விசாரணை காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.  அவரது விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் ஷாபாஸ் ஷரிப் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிபதியின் முன்னர் ஆஜரான ஷாபாஸ் ஷரிப், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு நான் பலகோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கிறேன். இதுவரை என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளால் என்மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரத்தையும் உருவாக்க முடியவில்லை என கூறினார்

    ஷாபாஸ் ஷரிப்பிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்குமாறு அரசுதரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    எனினும், ஷாபாஸ் ஷரிப்பின் விசாரணை காவலை வரும் 30-ம் தேதிவரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி  நஜமுல் ஹஸன் உத்தரவிட்டார். #Pakistanhousingscam #Shahbazsharif
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாசின் மரணம் அடைந்ததால், நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஸ் ஷரிப் பரோலில் வந்தார். #NawazSharif #KulsumNawaz
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
     
    இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.



    இவரது உடல்நலக் குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்து வந்தனர்.

    இந்நிலையில், தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நவாஸ் ஷரிப்.

    அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர் லாகூரை வந்தடைந்தனர். #NawazSharif #KulsumNawaz 
    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
     
    இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
    பனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நேற்று 7 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    அவற்றில் 3 மனுக்கள் நவாஸ் ஷரீப் சார்பிலும், தலா 2 மனுக்கள் மரியம் மற்றும் சப்தார் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டன.

    அவன்பீல்டு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் சட்டக் குறைபாடுகள் உள்ளதால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்யுமாறு அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நவாஸ் ஷரீப், மரியம் உள்பட 3 பேர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பின்னரே அவர்களை விடுவிப்பது குறித்து கோர்ட் முடிவெடுக்கும் என தெரிகிறது. #Sharifconvictionappeal #graftcase #Avenfieldverdictappeal
    ×