என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign ministers meets"

    • குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.
    • பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.

    இதில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க மந்திரி மார்கோ ரூபியோ, ஜப்பான் மந்திரி தகேஷி இவாயா, ஆஸ்தி ரேலிய மந்திரி பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    அதில், "பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் மீது எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தங்கள் கடமைகளுக்கு இணங்க, இந்த விஷயத்தில் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தீவிர மாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் மற்றும் ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார். #SushmaSwaraj
    புதுடெல்லி:

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இன்று காலை இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

    இதேபோல், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஸ்பெயின் வெளியுறவு துறை மந்திரி ஜோசப் போரெல் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மாரிஸ் பெயின் ஆகியோரையும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார்.



    அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

    சுஷ்மா சுவராஜை சந்தித்த பின்னர், நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். #SushmaSwaraj
    ×