என் மலர்
நீங்கள் தேடியது "America"
- சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
- நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.
இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
- அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வந்த பல இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
30 நாட்கள் கெடு
அமெரிக்காவில் அந்நியர் பிரிவு சட்டம் 1940 அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் முறைப்படி பதிவு செய்யவேண்டும். நீண்ட நாட்களாக இந்த சட்டம் பெயர்அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தார்.
இந்த சட்டம் கடந்த 11-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உடனே உள்துறை பாதுகாப்பு அரசு அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
நீங்கள் தாமாக வெளியேறினால் பாதுகாப்பானது. நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும். நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ள முடியும். நாங்களாகவே வெளியேற்றாமல் நீங்களே வெளியேறினால் எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவுக்கு வர முடியம். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
இந்த முடிவு அமெரிக்காவில் எச்.1-பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது. எச்-1 பி. விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்து இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசின் இந்த அதிரடி உத்தரவு வெளிநாட்டவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சீனா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
- இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது,
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34 சதேவீத வரி விதிப்பதாக அறிவித்தது.
வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.
இந்நிலையில் சீனா பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தனது சொந்த உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க உறுதியான எதிர்நடவடிக்கைகளை சீனா எடுக்கும்.
சீனாவுக்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்து வருகிறது. அமெரிக்கா தனது விருப்பப்படி நடக்க வலியுறுத்தினால் சீனா இறுதி வரை போராடும் என்று கூறப்பட்டுள்ளது.
- உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
- இந்திய பங்கு சந்தையில் 10 மாதத்தில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு அதற்கு எதிரான சீனாவின் பதில் வரி என உலக வர்த்தக போர் தீவிரமடைந்து வருகிறது.
இதனை தொடர்ந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்திய பங்கு சந்தையில் 10 மாதத்தில் இல்லாத சரிவு ஏற்பட்டு ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்திய முதலீட்டாளர்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். இதனால் இதுவரை இந்திய முதலீட்டாளர்களுக்கு தோராயமாக ரூ.45.57 லட்சம் கோடி சந்தை மூலதனம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20-ந் தேதி நிலவரப்படி நமது நாட்டின் சந்தை மூலதனம் ரூ. 4,31,59,726 கோடியாக இருந்தது. இன்று ரூ.3,86,01,961 கோடியாக குறைந்துள்ளது.
மொத்தம் 517 நிறுவனங்களின் பங்குகள் கீழ் சுற்றுக்கு சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், இன்று இந்திய பங்கு சந்தை சற்று உயர்வுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
- வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் பேசினார்.
- உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதையடுத்து இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, அதிபர் டிரம்ப் நியாயமான, சமநிலையான வர்த்தக நடைமுறை களை விரும்புகிறார்.
கனடாவில் அமெரிக்க வெண்ணை பொருட்களுக்கு 300 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் அமெரிக்க மதுபானங்களுக்கு 150 சதவீத வரி விதிக்கிறார்கள். ஜப்பானை பொறுத்தவரை அரிசிக்கு 700 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக, கடந்த பல தசாப்தங்களாக கனடா நம்மை மிகவும் நியாயமாக நடத்தவில்லை. உலக சமூகம் அமெரிக்காவை பல காலமாக ஏமாற்றி வருகிறது என்றார்.
- சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவி யேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
அவர் கூறும்போது, `நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கவனித்துக் கொள்வோம்' என்றார்.
மேலும் டிரம்ப் கூறும் போது, `ஜனநாயகக் கட்சியினரால் ஆட்சி செய்ய முடியாது என்பதையும், அவர்களின் கொள்கைகள் பயங்கரமானவை என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
குத்துச்சண்டை வளையத்தில் ஒரு பெண் ஒரு ஆணால் தாக்கப்படுவதை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. ஒரு குழந்தை ஒரு பையனாக வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணாக திரும்பி வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கக்கூடிய மாகாணங்களும் உள்ளன.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனக்குதானே மன்னிப்பு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர்
- விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம்,மேட்சல் மாவட்டம்,மோட்கூர் அடுத்த தச்சரம் பகுதியை சேர்ந்தவர் தர்மைய்யா, லலிதா தம்பதி. இவர்களது மகன் சந்தீப் குமார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு டெக்ஸாசில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் அவனி எலெனா என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்தீப் குமார் அவனி எலெனா இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது.
தங்களது காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். சந்தீப் குமார் காதலுக்கு அவரது பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். மகனின் எதிர்காலத்தை கருதி பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்ப நிகழ்ச்சி மல்காஜ் கிரி அடுத்த காட் கேசரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி சந்தீப் குமார், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களுக்கு ஏராளமானோர் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- அதிக வரிகளால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களையும் விற்க முடியாத சூழல் உள்ளதக டிரம்ப் குற்றசாட்டு
- கனடா நாடு அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது.
அமெரிக்கா மீது இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்றும் இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2-ந்தேதி முதல் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா மீதான வரிகளை குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்..
வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்தியா எங்களிடம் மிகப்பெரிய அளவில் வரிகளை வசூலிக்கிறது. இதனால் இந்தியாவில் எந்த பொருட்களையும் விற்க முடியாத சூழல் உள்ளது. தற்போது இந்தியா தனது வரிகளை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதை அம்பலப்படுத்தி உள்ளனர். பதிலுக்கு பதில் வரி விதிப்பதாக கூறிய நிலையில் இந்தியா வரிகளை குறைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
கனடா நாடு அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. யாரும் அதனை பேசவே இல்லை. இனி இதுபோல் நடக்கவே கூடாது. அவர்கள் எவ்வளவு வரி விதிக்கிறார்களோ அதேபோல் நாமும் வரி விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதற்கிடையே இந்தியா தனது விவசாய வர்த்தகத்தை இறக்குமதிகளுக்கு திறந்து விட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.