என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    X

    இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தார்.
    • பின்னர் இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.

    இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

    இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், இதுகுறித்து 8 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

    நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம் என்று நினைக்கிறேன். அது வேறு வகையான ஒப்பந்தமாக இருக்கும். இது நாம் உள்ளே சென்று போட்டியிடக்கூடிய ஒரு ஒப்பந்தமாக இருக்கும்.

    இந்தியாவுடன் மிகக் குறைந்த வரிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நிறுவனங்களும் சமமாக போட்டியிடும் வகையில் மிகக் குறைவான வரிகளை கொண்டதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×