என் மலர்tooltip icon

    இந்தியா

    15 மணிநேர இந்திய ரெயில் பயணத்தால் நுரையீரல் பாதிப்பு - அமெரிக்க Vlogger வெளியிட்ட வீடியோ வைரல்
    X

    15 மணிநேர இந்திய ரெயில் பயணத்தால் நுரையீரல் பாதிப்பு - அமெரிக்க Vlogger வெளியிட்ட வீடியோ வைரல்

    • அமெரிக்காவை சேர்ந்த நிக் மேடோக் உலகம் முழுவதும் பயணம் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
    • அவர் சமீபத்தில் இந்தியா வந்து ரெயில் பயணம் செய்தார்.

    அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த நிக் மேடோக். இவர் 8 ஆண்டு களாக உலகம் முழுவதும் பயணம் செய்து சமூக ஊடகங்களில் தனது பயணங்களை பதிவிட்டு வருகிறார். பல்வேறு வினோதமான இடங்களையும் பார்வையிட்டு பதிவிட்டுள்ள அவர் சமீபத்தில் இந்தியா வந்தார்.

    ஆனால் இந்திய ரெயில் பயணம் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. ஸ்லீப்பர் வகுப்பில் 15 மணி நேர பயணத்திற்குப் பிறகு கடுமையான சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், "15 மணிநேர ரெயில் பயணமா அல்லது வாரணாசியில் இறந்த உடல்களை ஒரு வாரம் சுவாசித்ததா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனது நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    அவர் வெளியிட்டு உள்ள காணொளியில், ரெயிலின் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியில் உள்ள அசுத்தமான கழிப்பறையைக் காட்டினார். அவர் தனது பயணத் தேதியையோ அல்லது அவர் சென்ற பாதையையோ குறிப்பிடவில்லை, ஆனால் ரயிலில் 15 மணிநேரம் கழித்ததாக மட்டும் குறிப்பிட்டுள்ளதோ டு இனி ரெயிலில் பயணம் செய்ய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    நிக் மேடோக் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிக் மேடோக்கிற்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×