search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Saudi Prince"

  • துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டார்.
  • அவரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது வழக்கு தொடரப்பட்டது.

  வாஷிங்டன்:

  அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவு ஆவணங்களைப் பெற 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை.

  இதையடுத்து, துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

  ஹதீஜா ஜென்கிஸ் மற்றும் கசோகியால் நிறுவப்பட்ட உரிமைக் குழு இந்த வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இளவரசரின் இரண்டு உதவியாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர்.

  இதற்கிடையே, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், தனது மகன் இளவரசர் முகமதுவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்க அரசு, பிற நாடுகளின் நீதிமன்றங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நீண்டகால சட்ட முன்மாதிரியை குறிப்பிட்டு முகமது பின் சல்மான் சமீபத்தில் பிரதமராக பதவியேற்றிருந்தாலும் அவருக்கு இறையாண்மை விலக்கு அளிக்கவேண்டும் என கோரியது.

  இது முகமது பின் சல்மானை பாதுகாக்கும் சூழ்ச்சி என்று கஷோகியின் வருங்கால மனைவி மற்றும் அவரது உரிமைகள் குழு வாதிட்டது.

  இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமெரிக்க அரசு அவருக்கு விலக்கு அளிக்க தகுதி இருப்பதாக கண்டறிந்ததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்தார்.

  மேலும், குற்றம் சாட்டப்பட்ட அவரது உதவியாளர்கள் மீது அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

  பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது. பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் என சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree
  புதுடெல்லி:

  சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பில் சல்மான் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதனைதொடர்ந்து, இருநாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா-சவுதி அரேபியா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

  இந்த ஒப்பந்தத்தையடுத்து, சவுதி இளவரசரும் பிரதமர் மோடியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

  புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய மோடி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

  சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ள சவுதி அரசை வரவேற்பதாகவும் இந்தியா-சவுதி இடையிலான ராணுவ கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக இன்று நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  பின்னர் பேசிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், ‘தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்தை வேரறுக்க உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் எங்களது நட்புநாடான இந்தியாவுக்கு சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய உங்களுடன் ஒன்றிணைந்து நாங்கள் செயலாற்றுவோம்’ என்று உறுதியளித்தார்.

  பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என்னும் இந்தியாவின் நிலைப்பாட்டை சவுதி அரேபியா ஆதரிக்கின்றது. இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் எனவும் சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree 
  அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வெளியுறவுத்துறை கமிட்டி, டிரம்புக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. #DonaldTrump #SaudiPrince #
  வாஷிங்டன்:

  சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில் வைத்து கடந்த மாதம் 2-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். சவுதியின் மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்த அவரது படுகொலை, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்தப் படுகொலை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின்பேரில்தான் நடந்துள்ளது என அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. கூறியது.

  நேற்று முன்தினம் இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து வெளியிட்டார். அப்போது கசோக்கி படுகொலையை இளவரசர் முகமது பின் சல்மான் நன்றாக அறிந்திருப்பார் என ஒப்புக்கொண்டார். ஆனால் தொடர்ந்து கூறும்போது, “ அவர் இதை செய்திருக்கலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டார்.

  பின்னர் அவர் கூறும்போது, “கசோக்கி படுகொலையில் சி.ஐ.ஏ. 100 சதவீதம் உறுதியாக கூறவில்லை” என்றார்.

  இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வெளியுறவுத்துறை கமிட்டி, டிரம்புக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

  கசோக்கி படுகொலையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பங்கு உண்டா, இல்லையா என்பதை டிரம்ப் கூற வேண்டும் என்று அந்த கமிட்டியின் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்களான பாப் கார்க்கரும், பாப் மெனன்டசும் கூறி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் குளோபல் மேக்னிட்ஸ்கை மனித உரிமை பொறுப்புடைமை சட்டத்தின்படி டிரம்புக்கு முறைப்படி கூறி உள்ளனர். இதில் டிரம்ப் 120 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  துருக்கி நாட்டு தூதரகத்தில் மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்கு சவுதி இளவரசர் மீது அமெரிக்க உளவுப்படை குற்றம்சாட்டியுள்ளது. #Khashoggi #SaudiPrince #CIA
  வாஷிங்டன்:

  சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

  இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில்  உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

  ஜமால் கஷோகியை தூதரகத்துக்கு வரவழைத்து சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் அவரை தீர்த்துகட்டி விட்டு, பிரேதத்தை மறைத்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கான ஆதாரமாக சவுதி தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில கண்காணிப்பு கேமரா பதிவுகளை துருக்கி நாட்டு போலீசார் வெளியிட்டனர். இதை சவுதி அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.

  இதன் அடிப்படையில் புலனாய்வு செய்துவந்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அந்த விசாரணையை இன்று நிறைவு செய்தது.  சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் உத்தரவின்பேரில் அங்கிருந்து சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான தனி விமானத்தில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகருக்கு வந்த 15 பேர், இங்குள்ள சவுதி நாட்டு தூதரகத்துக்கு ஜமால் கஷோகியை வரவழைத்தனர்.

  தூதரகத்தினுள் அவரை மயக்கத்துக்குள்ளாக்கி துண்டுத்துண்டுகளாக வெட்டிக் கொன்று, உடலின் துண்டங்களை ஒரு தூதரக அதிகாரி வீட்டின் கிணற்றில் போட்டு மறைத்து விட்டனர் என இந்த விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

  பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும், கவனத்துக்கு வராலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டுள்ளார். #Khashoggi #SaudiPrince #CIA
  ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #SaudiPrince #KhaledBinTalal
  ரியாத்:

  சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது வாரண்டுகள் பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

  அப்படி சிறையில் அடைக்கப்பட்ட இளவரசர்களில் ஒருவர், காலித் பின் தலால். இவர் மன்னர் சல்மானின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் சிறையில் அடைக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டு ஆன நிலையில் இப்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். இவரது சகோதரர் அல்வாலீத் பின் தலாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர்.

  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையால், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரச குடும்பத்தின் ஆதரவினை முழுமையாகப் பெறுகிற விதத்தில்தான் இப்போது இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  விடுதலை செய்யப்பட்டுள்ள இளவரசர் காலித் பின் தலால் குடும்பத்தினருடன் காணப்படுகிற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

  அவர் கைது செய்யப்பட்டபோதும், இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் அதற்கான காரணத்தை சவுதி அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #SaudiPrince #KhaledBinTalal 
  ×