என் மலர்

  நீங்கள் தேடியது "Yeman"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏமன் நாட்டின் ஹொடெய்டா மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஹவுத்திப் போராளிகளுக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த ஆவேசப் போரில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். #Yemen #Hodeida #Clashes
  சனா:

  ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

  அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.


  இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த பத்து நாட்களாக சண்டை வலுத்து வருகிறது.

  இந்நிலையில், நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் 150-க்கும் அதிகமானவர்கள் இருதரப்பிலும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

  ஹொடெய்டாவின் மேற்கு கடலோரப் பகுதிக்குள் அரசு ஆதரவாளர்கள் படையை தடையின்றி நுழையவிட்ட ஹவுத்தி படையினர், திடீரென்று நாற்பரங்களிலும் சூழ்ந்து கொண்டு நடத்திய இந்த தாக்குதலில் அரசு ஆதரவுப்படை வீரர்கள் அதிகமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.   #Yemen #Hodeida #Clashes 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏமன் நாட்டில் பஸ் மீது கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று தெரிவித்துள்ளது. #Yemenbusstrike #Yemenbusstrikekills40children
  சனா:

  ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை அதிபர் அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார்.

  இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஹவுத்தி போராளிகளும் சவுதி அரேபியா நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள நகரங்களின்மீது ஏவுகணைகளை வீசி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

  இந்த தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

  இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த புதன்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை சடா நகரின்மீது வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.

  பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மிக தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது அவ்வழியாக சென்ற பஸ் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 20-க்கும் அதிகமான குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட செய்திகள் வெளியாகின.

  குழந்தைகள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான பன்னாட்டு குழுவினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த வெள்ளிக்கிழமை வலியுறுத்தி இருந்தது.  இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என பின்னர் தெரியவந்தது. ஏமன் போராளிகள் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருதரப்பினருக்கும் அமெரிக்காவில் இருந்து போராயுதங்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்க அரசு விற்கவில்ல்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகன் நேற்று அறிவித்திருந்தது.

  இதற்கிடையில், பஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரின் உடல்களும் நேற்று (திங்கட்கிழமை) ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. பலியானவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் இந்த தாக்குதலுக்கு காரணமாக சவுதி அரேபியா அரசு மற்றும் அமெரிக்க அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், சடா நகரின் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய பல்வேறு தாக்குதல்களில் பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

  மேலும்சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோக்கா நகரில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி தலைமையிலான படைகள் ஒரு திருமண மண்டபத்தின் மீது நடத்திய வான்னழி தாக்குதலில் 131 உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

  இதேபோல், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சனா நகரில் நடைபெற்ற ஒரு இறுதி ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட மேலும் ஒரு தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர். இவ்விரு தாக்குதல்களையும் குறிதவறி நடந்த அசம்பாவித சம்பவங்கள் என தெரிவித்து விட்டது. மேலும், அப்பாவி பொதுமக்களை ஹவுத்தி போராளிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துவதால் இதுபோன்ற உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் கூட்டுப்படை தளபதிகள் சமாதானம் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Yemenbusstrike  #Yemenbusstrikekills40children 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏமன் நாட்டில் சவூதி அரேபியாவின் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #Hezbollah
  சனா:

  ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டுப்படை சண்டையிட்டு வருகிறது.

  இந்நிலையில், ஏமனின் வடக்கு பகுதியில் சவூதி எல்லைப்பகுதியில் சவூதி அரசின் கூட்டுப்படைகள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 41 கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், அதில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் சவூதி கூட்டுப்படை தளபதி துர்கி அல்-மாலிகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #saudicoalition #Hezbollah
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் வீசிய ஏவுகணையை சவுதி அரேபியா போர் விமானங்கள் வழிமறித்து தாக்கி அழித்தது.#SaudiAirDefenses
  ரியாத்:

  ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

  ஏமன் நாட்டின் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

  இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

  அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் சுமார் 3 கோடி மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

  இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ஜஸான் நகரில் உள்ள விமான நிலையத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் அந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழித்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.#SaudiAirDefenses
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏமனில் நடந்த குண்டு வெடிப்பில் இருகைகள் மற்றும் பார்வையை முழுவதுமாக இழந்த மாணவருக்கு கொச்சி மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒரு கண்ணில் பார்வை கிடைத்துள்ளது.
  கொச்சி:

  ஏமனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மத்திய ஏமனை சேர்ந்த இஸ்லாம் உசைன் என்ற 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் தனது வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்ட கன்னி வெடியில் சிக்கி, இரு கைகள் மற்றும் இரு கண் பார்வையை இழந்தார். மேலும், கால்களிலும் பலமாக அடிபட்டதால் நடப்பதும் சிரமாகியது.

  இதனை அடுத்து, தனது மகனை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என உறுதி கொண்ட உசைனின் பெற்றோர் முதலில் சிகிச்சைக்காக எகிப்து சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்த உசைன் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உசைனின் கால்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டனர்.

  பின்னர், கேரளாவின் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை உசைனுக்கு சமீபத்தில் நடந்துள்ளது. எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், உசைனின் இடது கண்ணில் தற்போது மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.

  “நான் முழுவதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால், மருத்துவர்கள் என்னை உற்சாகமூட்டிக்கொண்டே இருந்தனர். சிகிச்சைக்கு பின்னர் எனது அம்மாவை பார்த்தேன். அது விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தந்தது” என உசைன் கூறியுள்ளார். 
  ×