என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VR Library Section"
- சங்கரன்கோவில் முழு நேர நூலகத்தில் மெய்நிகர் நூலக பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.
- வடக்கு மாவட்ட செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. மெய்நிகர் நூலகப் பிரிவை தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் முழு நேர நூலகத்தில் மெய்நிகர் நூலக பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் மாவட்ட 2-ம் துணை ஆளுநர் அய்யாத்துரை தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் நூலகர் முருகன் வரவேற்றார்.
சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, பாரதி வாசக வட்டம் கவுரவ ஆலோசகர் வெள்ளைச்சாமி என்ற செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர், ராஜா எம்.எல்.ஏ. மெய்நிகர் நூலகப் பிரிவை தொடங்கி வைத்தார்.
மெய்நிகர் நூலக தொழில்நுட்ப கருவியின் மூலம் உலகத்தின் மிக முக்கியமான இடங்கள், நாடுகள், கண்டங்கள், மலைகள், அருவிகள், கடல்கள் உள்ளிட்ட பல செய்திகளை இதன் மூலம் 360 டிகிரியில் பார்க்க முடியும். இதை காணும் பொழுது நேரில் காண்பது போல் உணர முடியும். இதனால் மாணவர்களின் கல்வி தரமும் உயரும்.
இந்த நிகழ்ச்சியில் மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார், நூலகர் சிவகுமார், நூலக ஆய்வாளர் கணேசன், பாரதி வாசகர் வட்டம் செயலாளர் நாராயணன், ஆசிரியர் இளங்கோ கண்ணன், வேணுகோபால் என்ற கண்ணன், நூலகர்கள் சண்முகவேல், அப்துல்காதர் ஜெய்லானி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி, கவுன்சிலர்கள் வேல்ராஜ், விஜயகுமார், நாராயணன், தி.மு.க.வை சேர்ந்த சம்பத், அன்சாரி ஜெயக்குமார், பிரகாஷ், ஆதி, பாரதிராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.