search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mano College"

    • திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது.
    • விழாவில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது. திசையன்விளை லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் தலைமை தாங்கினார். கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசி ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் இந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமை தாங்கினார். தொழில் அதிபர் விஜயேஸ்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். மேலும் கல்வி ஊக்க தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு பல போட்டிகளில் வென்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் பாராட்னார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை விடுதி களில் தங்கி படிக்கும் அனைத்து மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகள் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் தென்காசியில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு பல போட்டிகளில் வென்றனர்.

    முதலாமாண்டு பி.பி.ஏ. மாணவி மாரியம்மாள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், நீளம் தாண்டுதல் போட்டியில் 3-ம் பரிசையும் வென்றார். 3-ம் ஆண்டு கணிதவியல் பயிலும் கீர்த்திகா நீளம் தாண்டுதலில் முதல் பரிசையும், கட்டுரை போட்டியில் 3-ம் பரிசையும், 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஜென்சி பேச்சு போட்டியில் முதல் பரிசையும், 2-ம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் பயிலும் காயத்ரி கட்டுரை போட்டியில் 2-வது பரிசையும், 2-ம் ஆண்டு பி. காம்., மாணவிகள் சிவப்பிரியா ஓட்டப்பந்தயத்தில் 2-வது பரிசையும், மகேஸ்வரி நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது பரிசையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது பரிசையும் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கேடயங்களையும், சான்றிதழ்களை யும் வழங்கினார். வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளை யும் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். விடுதி காப்பாளர் ரத்னமுத்து உடனிருந்தார்.

    • வேலைவாய்ப்பு கருத்தரங்கம் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்,

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார்.

    வேலைவாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கணபதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தனது தலைமையுரையில் மாணவ- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பயிற்சி இல்லாத முயற்சி எதிர்பார்த்த வெற்றியை தராது என்றும் கூறினார்.

    கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள தேவையான வழிமுறைகளையும், படிக்க வேண்டிய புத்தகங்களையும் தெரிவித்தார். மேலும் போட்டி தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் தன்மையையும் உதாரணத்துடன் விளக்கினார்.

    பின்னர் மாவட்ட வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் சையது முகமது, அரசு நிறுவனங்களில் உள்ள பணி வாய்ப்பினை பற்றியும், அந்த நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விளக்கிப் பேசினார். பின்னர் மாணவ- மாணவிகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கருத்தரங்கில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முடிவில் தமிழ் துறை உதவி பேராசிரியை மேனகா நன்றி கூறினார்.

    • போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 13-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

    போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு தொழில் அதிபர் விஜெஸ்குமார், அப்புவிளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாசன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.

    கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரி தமிழ்துறை தலைவர் தணிகை செல்வி நன்றி கூறினார்.

    ×