search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports Festival"

    • முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 33-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
    • போட்டிகளில் பங்கேற்ற சிவப்பு அணியினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 33-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் பி.ஜீவன்ஜேக்கப் வரவேற்று பேசினார். 2-ம் வகுப்பு மாணவன் ரோன் சாமின் தந்தை கார்த்திக் தலைமை தாங்கி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். போட்டிகளில் பங்கேற்ற சிவப்பு அணியினர் சாம்பியன் பட்டம் பெற்றனர். பள்ளி துணை முதல்வர் டேவிட் நன்றி கூறினார்.

    • தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இந்நிகழ்சிக்கு திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், துணை தாசில்தார் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தாளாளரும், முதல்வருமான சோ. மீனா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகஅதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்திஜெய ஸ்ரீ, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் கிருபைமேரி கிறிஸ்டி பாய், துணைத் தலைவர் அதிமுத்து என்ற காமராஜர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை முறைகாரர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். அம்பலகாரர் சக்திவேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி விழாவிற்கு வரவேற்றார். பள்ளியின் செயலர் சங்கர் ஒலிம்பிக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி உட்பட ஏராளமான போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

    பள்ளியின் தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன், உறுப்பினர் ஜெகன் உள்பட நிர்வாக குழுவினர் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியைகள் திருவளர்ச்செல்வி, மீனு பிரியங்கா ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு சி.பா. ஆதித்தனார் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் சி.பா. சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு உடன்குடி வட்டார கல்வி அலுவலர் டக்ளஸ் அல்பட்ராஜ் தலைமை தாங்கினார் . தொழில் அதிபர் சுடலைமுத்து, பள்ளி பழைய மாணவர் வீரபாண்டி, சிலம்ப பயிற்சியாளர் சிவமுத்துலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்று பேசினார்.

    விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளி செயலாளர் ஆதிலிங்கம, நிர்வாகக்குழு தலைவர் சங்கரநாராயணன், பொருளாளர் வைகுண்டராமன், சென்னை வாழ் வேப்பங்காடு நாடார் சங்கத்தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன், சுப்பிரமணியன், லிங்கராஜ், அருணாச்சலம், சுரேஷ்குமார், சேர்மத்துரை, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி நன்றி கூறினார்.

    • பள்ளி விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள் வழங்கி னார்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் ஒய்.டபிள்யூ.சி.ஏ. பள்ளியின் 56-வது விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பள்ளி தாளாளர் நிர்மலா சந்தோஷம், முதல்வர் மரகதம் ஜெயசீலி ஆகியோர் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டு தல், கோகோ போன்ற பல்வேறு விளையாட்டு களில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

    • காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளை–யாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந் திய கிரிக்கெட் வீரர் நடரா–ஜன் கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்ட விளை–யாட்டு மற்றும் இளை–ஞர் நலன் அலுவலர் ரமேஷ் கண்ணன் கௌரவ விருந்தி–னராக கலந்துகொண்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

    விழாவையொட்டி நடை–பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க–ளுக்கு சிறப்பு பரிசினை கிரிக்கெட் வீரர் நடராஜன் வழங்கினார். பெற்றோர்க–ளுக்கான விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. விழாவில், கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசுகையில், கடின உழைப்பபை பின்பற் றினால் வாழ்வில் எத்துறை–யிலும் சாதிக்கலாம் என்றும், விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புபவர்கள் உடல் ஆரோக்கியத்தை கவ–னமாக பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும் விளையாட்டு துறைக்கு உடலே மூலதனம், நேரம் தவறாமை, ஒழுக்கம், கடின உழைப்பு இவை மூன்றும் ஒரு மனிதனை உயர்த்தும் செயல்பாடுகள். திறமை இருந்தால் எந்த மூலையில் இருந்தாலும் உலகப்புகழ் பெறலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம். வாழ்வில் கஷ் டப்பட்டால் மட்டுமே வெற்றி நிலைக்கும் எனவும் மாணவர்களுக்கு ஆர்வமூட் டூம் வகையில் பேசி–னார்.

    பள்ளியின் சேர்மன் குமரேசன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், புகழ்பெற்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அப்புகழைப் பெற மாணவர்கள் பெரும் முயற் சியை மேற்கொள்ள வேண் டும் என்றார்.பள்ளியின் துணை சேர்மன் அருண் குமார் பேசும்போது, எந்த துறையில் நீங்கள் வெற்றி அடைந்தாலும் உங்களின் பணிவே உங்களை சமுதா–யத்தில் உயர்த்தும் என்றார். பள்ளியின் முதல்வர் உஷா குமாரி வரவேற்புரை வழங் கினார். துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறி–னார். நிகழ்ச்சியில் மாண–வர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலு–வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா நடக்கிறது.
    • உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா போதை பொருள்களுக்கு எதிரான மாணவர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான இன்னாசி வரவேற்றார்.

    இவ்விளையாட்டு விழாவில் கல்லூரி முன்னாள் மாணவரும் (பழனி)மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இக்கல்லூரி அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறதை ஒரு முன்னாள் மாணவனாக கண்டு மகிழ்கிறேன். மேலும் மாணவர்கள் சமுதாய அக்கறை உள்ளவர்களா கவும் வளர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசி போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

    கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம் செயலர் அந்தோ ணிசாமி, முதல்வர் அன்ப ரசு, இணை முதல்வர் சுந்தர ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    உடற்கல்வி இயக்குநர் வனிதா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • முகமது சதக் தஸ்தகீர் பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் பள்ளியில் 13-ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் சேகர், கல்வியியல் கல்லூரி சோமசுந்தரம், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஆலியா ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக மணிகண்டன் கலந்து கொண்டார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    முன்னதாக நடந்த விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக போலீஸ் கமிஷனர் பொன்தேவி கலந்து கொண்டார்.சிலம்பம், கராத்தே, யோகா, அம்பு எய்தல் உள்ளிட்ட 13 வகையான விளையாட்டுகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • குதிரையேற்ற பயிற்சியாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலை யன்கோட்டை யில் உள்ள கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கர வேளா ண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரி யின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கினார்.முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், அழகப்பா பல்கலை கழக உடற்கல்வி கல்லூரி யின் பொறுப்பு முதல்வர் முரளி ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடி ஏற்ற ப்பட்ட பின்பு கல்லுரியின் குதிரை யேற்ற பயிற்சி யாளர் வினய் தேசிய கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம்வந்தார்.தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற சேது பாஸ்கரா வேளான் கல்லூரி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்தனர். கல்லூரி யின் உதவி உடற்கல்வி இயக்குனர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தி னர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டா லின், மாணவர்களின் தன்னம் பிக்கையை தூண்டும் வகையில் விளையாட்டு துறையில் சாதித்த பல்வேறு சாதனையாளர்க ளின் வாழ்க்கை நிகழ்வு களை கூறினார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்க ளுக்கு சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.

    • இளையான்குடி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக சாதிக் அலி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் செயலர் ஜபருல்லாகான், ஆட்சி குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முகமது முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதில் உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவ, ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

    • திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமை தாங்கினார். தொழில் அதிபர் விஜயேஸ்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். மேலும் கல்வி ஊக்க தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கொறுக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இயந்திரவியல் துறை தலைவர் தியாகராஜன் வரவேற்றார், கல்லூரி முதல்வர் காசி தலைமை வகித்தார்.

    எம்எல்ஏ மாரிமுத்து, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், கொருக்கை ஊராட்சி தலைவர் ஜானகிராமன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர்.காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
    ×