என் மலர்
நீங்கள் தேடியது "S.Thangapalam Matric School"
- வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
- டி.எஸ்.பி. அசோக் முன்னிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சமாதான புறா பறக்கவிடப்பட்டது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக புளியங்குடி போலீஸ் டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முருகேசன், மரங்களின் காதலன் தலைமலை மற்றும் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் இராஜகயல்விழி வரவேற்று பேசினார். பள்ளியின் சேர, சோழ, பாண்டியா மற்றும் பல்லவாஸ் அணிகளின் அணிவகுப்பு மரியாதையை டி.எஸ்.பி. அசோக் ஏற்றுக் கொண்டார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்புகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார்கள். தொடர்ச்சியாக டி.எஸ்.பி. அசோக் முன்னிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சமாதான புறா பறக்கவிடப்பட்டது. மாணவர்கள் பல வகையான வண்ண கலர்களுடன் கூடிய உபகரணங்களை வைத்து உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டி செய்து அசத்தினார்கள்.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் , கேடயங்களும் , சான்றிதழும் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கு தனியாக விளையாட்டு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உடனடியாக பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.






