என் மலர்
உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
- கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 22-வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் பால முருகன் வரவேற்றார். தேசியக் கொடியை சிறப்பு விருந்தினர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவும், ஒலிம்பிக் கொடியை மற்றொரு சிறப்பு விருந்தினர்-விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறனும், கல்லூரிக் கொடியை கல்லூரிச் செயலர் அ.பா.செல்வராசனும் ஏற்றினர்.
தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. இளநிலை தகவல் தொழில்நுட்பவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அபிஷேக் விளையாட்டு விழாவுக்கான உறுதிமொழி வாசித்தார்.
100மீட்டர், 400மீட்டர் ஓட்டம், மாணவர் நடனம். மாணவிகளின் சிலம்பம். பிரமிடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகசுவரன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சென்னையை சேர்ந்த சர்வதேச 2-வது கிராண்ட் மாஸ்டர் குகேசின் பயிற்றுநர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.அவர் ேபசுகையில், ஒழுக்கம், காலம் தவறாமை ஆகிய 2-ம் வெற்றி பெறுவதற்கான வழிகள். மனதை எப்பொ ழுதும் அமைதியான சூழலில் வைத்திருக்க வேண்டும். எதற்கும் பதற்றப்படக் கூடாது.
நம்முடைய எதிரிகள் மூலமே நமக்கு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆகவே அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.மற்றொரு சிறப்பு விருந்தினரான விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் ராஜேந்திரன் மணி அணியும் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி மந்தனா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பிடித்தன.
உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் புனிதவதி நன்றி கூறினார்.






