search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekannanda Vidyashram School"

    • சிறப்பு விருந்தினராக மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றினார்.
    • உடற்கல்வி இயக்குநர் உமாநாத் விளையாட்டு அறிக்கை வாசித்தார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12-வது விளையாட்டு விழா பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் விமர்சையாக நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றியும், அதனால் பெற்றோர்கள் மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சிறப்புரை ஆற்றினார்.

    இதில் நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி மற்றும் நெல்லை விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயரத்னராஜன் கலந்துகொண்டனர்.

    பள்ளியின் தாளாளர் டாக்டர். திருமாறன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் உமாநாத் விளையாட்டு அறிக்கை வாசித்தார். தொடக்க நிகழ்ச்சியாக மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    நீச்சல் பயிற்றுநர் கர்ணன் கலந்து கொண்டார். குறிஞ்சி அணியினர் 69 புள்ளிகள் பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    ×