என் மலர்
நீங்கள் தேடியது "Annual Festival"
- 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந் தேதி துவங்குகிறது.
- ஆகஸ்டு 3-ந்தேதி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெறுகிறது.
உடுமலை :
உடுமலை யு.எஸ்.எஸ்., காலனியில் புகழ்பெற்ற ஓம்சக்தி ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந்தேதி துவங்குகிறது.
அன்று கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நடக்கிறது. ஆகஸ்டு 3-ந்தேதி காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. வரும் 4ந் தேதி மறுபூஜை, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை யு.எஸ்.எஸ்., காலனி பொதுமக்கள், நண்பர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. தூத்துக்குடி பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் பீட்டர் தேவதாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
- விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 13-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவினை போப் கவுன்சில் சேர்மன் ஜான் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். சாயர்புரம் சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் ஆசி வழங்கினார்.
கல்லூரி தாளாளர் டி.எஸ்.கே.ராஜரத்தினம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்மொழி செல்வி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. தூத்துக்குடி பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் பீட்டர் தேவதாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களுக்கு பொருளியல் கற்கும் பொழுது நல்ல வேலை வாய்ப்பினை பெறுவதற்கு அதிக திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான கருத்துக்களை கூறினார்.
சிறப்பு விருந்தினராக ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெபிதா பங்கேற்று மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான இந்தியன் டென்டல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் அருண்குமார் மாணவர்கள் விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலையும் செய்து வெற்றியடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விழாவில் ஜானகி ராஜரத்தினம், பிரியா பிரகாஷ்ராஜ் குமார், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சாயர்புரம் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் தேவசகாயம், தங்கபாண்டி, சுமித்ரா, ஆலயமணி, அருண் ஆகிய திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜெயக்குமார், சீசன் தியாகராஜன், எமர்சன், இருதயராஜ், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி நிறுவனர் டாக்டர் பிரகாஷ்ராஜ் குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் டாக்டர் அருள்மொழி செல்வி தலைமையில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவ- மாணவிகளும் செய்திருந்தனர்.
- போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 13-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு தொழில் அதிபர் விஜெஸ்குமார், அப்புவிளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாசன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.
கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரி தமிழ்துறை தலைவர் தணிகை செல்வி நன்றி கூறினார்.