கூடலூர் மண்வயல் ரீமாதேஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா

சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது..
கூடலூர் மண்வயல் ரீமாதேஸ்வரர் கோவிலில் ஆண்டு விழா
Published on

 ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com