search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி
    X

    விளையாட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

    104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி

    • நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி-நாடார் மேல்நிலைப்பள்ளியில் 104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாவிருத்தி சங்கம் உறவின் முறைக்குபாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி 104-வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.

    53-வது வார்டு உறுப்பினர் அருண்குமார், உதவி பொறியாளர் ராம்சுப்பு ஆகியோர் தொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். பள்ளி செயலாளர் குணசேகரன், உறவின் முறை தலைவர் கணபதி ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    பேரணி காமராஜர் விளையாட்டு திடலில் தொடங்கி மதுரை கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நடந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் (சட்டம், ஒழுங்கு) ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றினார்.வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பள்ளி கொடியை பள்ளி செயலாளர் குணசேகரன் ஏற்றினார். சந்திரசேகரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

    வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டும், பாரம்பரிய ஒயிலாட்டத்துடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    உறவின் முறை தலைவர் கணபதி, பொருளாளர் ராஜன், செயலாளர் மயில்ராஜன், துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணை செயலாளர் அருஞ்சுனை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமையுரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் வாழ்த்தி பேசினார்.

    நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் காந்திபாய் சுவாடியடியாள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நாகநாதன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    Next Story
    ×