என் மலர்

  நீங்கள் தேடியது "Guru Bhagavan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுப கிரகமான குரு பகவானின் மந்திரங்கள் இவை.
  • இந்த மந்திரங்களை ஜெபித்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க துவங்கும்.

  குரு ஸ்லோகம் :

  குரு பிரம்மா குரு விஷ்ணு

  குரு தேவோ மகேஸ்வர;

  குரு சாஷாத் பரப்பிரம்மா

  தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

  குரு மந்திரம் :

  தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச

  குரும் காஞ்சன ஸந்நிபம்

  புத்தி பூதம் திரிலோகேஸம்

  தம் நமமி பிருகஸ்பதிம்

  குரு பகவான் காயத்ரி :

  வருஷபத் வஜாய வித்மஹே

  க்ருணீ ஹஸ்தாய தீமஹீ

  தந்நோ குரு ப்ரசோதயாத்

  குரு பகவானின் மூல மந்திரம்

  "ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ:

  பொன்னன் என்பதும் முழுமையான சுப கிரகமான குரு பகவானின் மூல மந்திரம் இது தான். மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருபவர்கள் வாழ்வில் பல நன்மையான மாற்றம் ஏற்படும்.

  வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை 108 முறை ஜெபிப்பவர்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை, பொருள் சேர்க்கை உண்டாகும். 41 நாட்கள் இந்தமந்திரத்தை ஜெபித்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க துவங்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு உள்ளது.
  • குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன

  குரு பகவான் ஆங்கிரஸ முனிவருக்கும், சித்ராதேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு. ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு மகன் ஒருவர் உண்டு. அவர் பெயர் பரத்வாஜர்.

  குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறார். இவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர். இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார். ஒரு ராசியைக் கடக்க ஓராண்டு எடுத்துக் கொள்ளும் குரு பகவான் பன்னிரண்டு ராசிகளையும் கடக்கப் பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

  குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவைத் தொட்டு விட்டால் அன்றுதான் மகாமகம்.

  குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன.

  காசிக்குச் சென்று குரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு உள்ளது.

  குருவிற்கு பிருஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு. குரு பகவான் தமிழகத்தில் தென் குடித்திட்டை, பட்டி, திருச்செந்தூர் ஆகிய மூன்று ஸ்தலங்களுக்குச் சென்று ஈஸ்வரனை, பூஜித்துப் பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி.
  • கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

  நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குருவின் பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வச்சிறப்பு ஆகியவை ஏற்படும். ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலோ, கோசார ரீதியாகக் கெட்டவரானாலோ குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

  தட்சிணாமூர்த்தியை தரிசித்து பூஜித்து தியானித்து அர்ச்சனை முதலியவை செய்தால் குரு தோஷம் விலகும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி. குருதோஷத்துக்கு ஆலங்குடி பரிகாரத்தலம் என்று அதன் தலபுராணமும் குறிப்பிடுகிறது.

  குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும். அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குரு பகவான் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
  • குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறார்.

  ஓம் அன்ன வாகனனே போற்றி!

  ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி!

  ஓம் அபய கரத்தனே போற்றி!

  ஓம் அரசு சமித்தனே போற்றி!

  ஓம் அயன் அதிதேவதையனே போற்றி!

  ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி!

  ஓம் அறிவனே போற்றி!

  ஓம் அறிவுக்கதிபதியே போற்றி!

  ஓம் அறக்காவலே போற்றி!

  ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி!

  ஓம் ஆண் கிரகமே போற்றி!

  ஓம் ஆணவமழிப்பவனே போற்றி!

  ஓம் இந்திரன் பிரத்யதிதேவதையனே போற்றி!

  ஓம் இருவாகனனே போற்றி!

  ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி!

  ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி!

  ஓம் உதித்தியன் சோதரனே போற்றி!

  ஓம் உபகிரக முடையவனே போற்றி!

  ஓம் எண்பரித் தேரனே போற்றி!

  ஓம் எளியோர்க் காவலே போற்றி!

  ஓம் ஐந்தாமவனே போற்றி!

  ஓம் ஏடேந்தியவனே போற்றி!

  ஓம் கருணை உருவே போற்றி!

  ஓம் கற்பகத் தருவே போற்றி!

  ஓம் கடலை விரும்பியே போற்றி!

  ஓம் கமண்டலதாரியே போற்றி!

  ஓம் களங்கமிலானே போற்றி!

  ஓம் கசன் தந்தையே போற்றி!

  ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி!

  ஓம் கடகராசி அதிபதியே போற்றி!

  ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி!

  ஓம் காக்கும் சுவையனே போற்றி!

  ஓம் கிரகாதீசனே போற்றி!

  ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி!

  ஓம் குருவே போற்றி!

  ஓம் குருபரனே போற்றி!

  ஓம் குணசீலனே போற்றி!

  ஓம் குரு பகவானே போற்றி!

  ஓம் சதுர பீடனே போற்றி!

  ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி!

  ஓம் சான்றோனே போற்றி!

  ஓம் சாந்த மூர்த்தியே போற்றி!

  ஓம் சிறுமையழிப்பவனே போற்றி!

  ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி!

  ஓம் கராச்சாரியனே போற்றி!

  ஓம் சுப கிரகமே போற்றி!

  ஓம் செல்வமளிப்பவனே போற்றி!

  ஓம் செந்தூரில் உயர்ந்தவனே போற்றி!

  ஓம் தங்கத் தேரனே போற்றி!

  ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி!

  ஓம் தாரை மணாளனே போற்றி!

  ஓம் திரிலோகேசனே போற்றி!

  ஓம் திட்டைத் தேவனே போற்றி!

  ஓம் தீதழிப்பவனே போற்றி!

  ஓம் தூயவனே போற்றி!

  ஓம் துயர் துடைப்பவனே போற்றி!

  ஓம் தெளிவிப்பவனே போற்றி!

  ஓம் தேவ குருவே போற்றி!

  ஓம் தேவரமைச்சனே போற்றி!

  ஓம் தேவர்குலக் காவலனே போற்றி!

  ஓம் நற்குணனே போற்றி!

  ஓம் நல்லாசானே போற்றி!

  ஓம் நற்குரலோனே போற்றி!

  ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி!

  ஓம் நலமேயருள்பவனே போற்றி!

  ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி!

  ஓம் நாற்கோணப் பீடனே போற்றி!

  ஓம் நாற்கரனே போற்றி!

  ஓம் நீதிகாரகனே போற்றி!

  ஓம் நீதி நூல் தந்தவனே போற்றி!

  ஓம் நேசனே போற்றி!

  ஓம் நெடியோனே போற்றி!

  ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி!

  ஓம் `பாடி'யில் அருள்பவனே போற்றி!

  ஓம் பிரஹஸ்பதியே போற்றி!

  ஓம் பிரமன் பெயரனே போற்றி!

  ஓம் பீதாம்பரனே போற்றி!

  ஓம் புத்ர காரகனே போற்றி!

  ஓம் புணர்வசு நாதனே போற்றி!

  ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி!

  ஓம் பூரட்டாதிபதியே போற்றி!

  ஓம் பொற்பிரியனே போற்றி!

  ஓம் பொற்குடையனே போற்றி!

  ஓம் பொன்னாடையனே போற்றி!

  ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி!

  ஓம் பொன்னிற த்வஜனே போற்றி!

  ஓம் மணம் அருள்பவனே போற்றி!

  ஓம் மகவளிப்பவனே போற்றி!

  ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி!

  ஓம் `மமதை' மணாளனே போற்றி!

  ஓம் முல்லைப் பிரியனே போற்றி!

  ஓம் மீனராசி அதிபதியே போற்றி!

  ஓம் யானை வாகனனே போற்றி!

  ஓம் யோகசித்தி சோதரனே போற்றி!

  ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி!

  ஓம் ருத்ராட்சதாரியே போற்றி!

  ஓம் வடதிசையனே போற்றி!

  ஓம் வடநோக்கனே போற்றி!

  ஓம் வள்ளலே போற்றி!

  ஓம் வல்லவனே போற்றி!

  ஓம் வச்சிராயுதனே போற்றி!

  ஓம் வாகீசனே போற்றி!

  ஓம் விசாக நாதனே போற்றி!

  ஓம் வேதியனே போற்றி!

  ஓம் வேகச் சுழலோனே போற்றி!

  ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி!

  ஓம் `ஹ்ரீம்' பீஜ மந்திரனே போற்றி!

  ஓம் வியாழனே போற்றி!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திட்டை குருபகவானை வியாழன், ஞாயிற்றுக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
  • குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.

  வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

  கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

  குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான்.

  திட்டை குருபகவானை விரதம் இருந்து வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள். குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள். தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம்.
  • குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும்.

  குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும். 1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குரு மங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம். அவற்றை பற்றிய விளக்கம்:

  1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் "கஜகேசரி யோகம்" உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.

  2) குருச்சந்திரயோகம் : சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் "குருச்சந்திரயோகம்" உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

  3) குரு மங்களயோகம் : குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் "குரு மங்கள யோகம்"ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.

  4) ஹம்சயோகம் : சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த "ஹம்ச' யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

  5) சகடயோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், "சகடயோகம்" ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம்.
  • குரு பார்வை கோடி நன்மை தரும் என்கிறார்கள்.

  ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார். சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.

  குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர். தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப்போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

  அப்போது தான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது. திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பு ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

  தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும்? ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

  அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்தது போலப்பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான். ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது? குழந்தை எப்படிப் பிழைத்தது?- தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.

  புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்? சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான். ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்த போதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும். குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும்.
  • குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.

  பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும். குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.

  சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.

  "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

  காணா இன்பம் காண வைப்பவனே!

  பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

  உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

  சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

  கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

  தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

  நிலையாய் தந்திட நேரினில் வருக!

  "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

  இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

  உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

  செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

  வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

  என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்.".

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
  • ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.

  தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும். வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டிச்சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டிக் குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும். நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.

  வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது. வியாழனன்று குரு பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.

  மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமைகளில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம். எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது. ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும். இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
  • ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.

  குரு என்னும் வியாழ பகவானைத் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிக்கவராகையால் 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள். ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.

  குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தருவர். கம்பீரமான தோற்றம், சிறந்த குரல் வளம், புகழ், சன்மானம், நல்ல வீடு, வாகனம், நல்ல நண்பர்கள், சுற்றம், தெய்வ காரியங்களில் வெற்றி போன்ற பலன்களையும் குரு தர வல்லவர்.

  குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும். கோச்சார ரீதியாக ஜென்ம ராசியில் இருந்து குரு 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு வருகையில் நன்மை உண்டாகும்.

  குருபகவானுக்கு அரசன், ஆசான், ஆண்டளப்பான், சிகண்டீசன், சித்தன், சீவன், சுந்தரப்பொன், சுரகுரு, தேவமந்திரி, பிரகஸ்பதி, பீதகன், பொன், மந்திரி, மறையோன், வியாழன், வேதன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு.

  தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதியான இவருக்கு உரிய அதிதேவதை பிரம்மன், நிறம் - மஞ்சள், வாகனம்-மீனம், தானியம் - கடலை, மலர்- வெண்முல்லை, ஆடை- மஞ்சள் நிற ஆடை, புஷ்பராகமணி, உணவு- கடலைப் பொடி அன்னம், ஆபரணம்- அரசன் சமித்து, தங்க உலோகம் ஆகியன ஆகும். இந்திரனின் அமைச்சராகவும் தேவர்களின் குருவாகவும் திகழும் வியாழன் பிரம்மதேவரின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும் வசுதா தேவிக்கும் பிறந்த குழந்தைகளுள் ஏழாவதாக பிறந்த சிறப்பினை உடையவராவார். இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர். பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.

  குருவின் ஆட்சி வீடுகள் தனுசு, மீனம், மூலதிரிகோண ராசி தனுசு, உச்ச வீடு கடகம். நீச்ச வீடு மகரம் ஆகும். மேஷம் சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன நட்பு வீடுகள்.

  ரிஷபம், மிதுனம் துலாம் பகை வீடுகள்.

  சூரியன், சந்திரன் நண்பர்கள். புதன் சுக்கிரன் பகைவர்கள். சனி, ராகு, கேது சம நிலையினர்.

  ஒரு ஜாதகத்தில் குரு கெட்டுப் போயிருந்தால், அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுதல், பெரியோர் சொல் கேளாமை, தெய்வ நிந்தனை, உறவினருடன் பகை, பொய் கூறல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்.

  தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும். வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டிச்சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டிக் குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும். நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.

  வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது. வியாழனன்று குரு பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.

  மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமைகளில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம். எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது. ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும். இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
  • தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும்.

  'தட்சிணம்' என்பதற்கு 'தெற்கு' என்று பொருள். அதற்கு 'ஞானம்' என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக தெற்கு நோக்கி அமர்ந்து, தன் பக்தர்களுக்கு அருளை வழங்கும் மூர்த்தி என்பதால் இவருக்கு 'தட்சிணாமூர்த்தி' என்று பெயர்.

  சின் முத்திரை

  வலது கை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாளத்தையே 'சின்முத்திரை' என்பார்கள். இதில் கட்டை விரல் கடவுளைக் குறிக்கும். சுட்டு விரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிர விரல் கர்மம் என்ற செயலையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்து நின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் கடந்து, இறைவனை நினைத்து வழிபட்டால், அந்த இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதையே இந்த முத்திரை நமக்கு பறைசாற்றுகிறது.

  குருவாக வணங்குவது ஏன்?

  குரு என்ற வடமொழி சொல்லுக்கு, பெரியவர், பிதா, அரசன் போன்ற பொருள் உண்டு. 'கு' என்பது 'இருள்' அல்லது 'அறியாமை' என்றும், 'ரு' என்றால் 'போக்குவது' என்றும் பொருள்படும். உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பவர். அதனாலேயே தட்சிணாமூர்த்தியையும் குருவாக நினைத்து வழிபடுகிறோம்.

  வியாக்யான தட்சிணாமூர்த்தி

  யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யானம் என்ற நான்கு நிலைகளில், தட்சிணாமூர்த்தி வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோவில்களில் வியாக்யான தட்சிணாமூர்த்தியே வீற்றிருப்பதை நாம் காணலாம். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கும், வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

  வழிபாடு

  தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லைப்பூ மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.

  குரு - தட்சிணாமூர்த்தி வித்தியாசம்

  பக்தா்கள் பலரும் தட்சிணாமூர்த்தியையும், நவக்கிரகத்தில் வீற்றிருக்கும் குரு பகவானையும், ஒருவரே என்று நினைத்து வழிபடுகிறார்கள். ஆனால் தட்சிணாமூர்த்தி வேறு.. நவக்கிரகத்தில் வீற்றிருக்கும் குரு பகவான் வேறு என்பதை நாம் உணர வேண்டும். தட்சிணாமூர்த்தியின் திசை தெற்கு. அவர் சிவாலயங்களில் தெற்கு நோக்கி வீற்றிருப்பதை நாம் காண முடியும். அதே நேரம் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் அதில் வடக்கு திசை நோக்கி இருப்பார். ஆனால் இருவரும் தங்களின் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள்.

  ஆம்... இருவருமே குருவிற்கான வேலையைச் செய்கிறார்கள். தேவர்களின் ஆலோசகராகவும், குருவாகவும் இருப்பவர் பிரகஸ்பதி. இவரை வியாழ பகவான் என்பார்கள். இவரே நவக்கிரக அந்தஸ்து பெற்ற குரு பகவான். தட்சிணாமூர்த்தி என்பவர், சிவபெருமானின் அம்சமாக தோன்றியவர். இவர் அம்பாளுக்கும், சனகர், சனாதனர் உள்ளிட்ட நான்கு முனிவர்களுக்கும், நான்கு வேதங்களையும் கற்பித்தவர். இருவருக்கும் மஞ்சள் ஆடையே, வஸ்திரமாக அணிவிக்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

  நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் இன்று குருவார வழிபாடு நடைபெற்றது.

  இதனை முன்னிட்டு கலங்காமற் காத்தவினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

  மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

  ×