என் மலர்

  ஆன்மிகம்

  ராகு கேது முருகன்
  X
  ராகு கேது முருகன்

  ராகு-கேது தோஷங்கள் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் பாராயணம் செய்தால் ராகு, கேது தோஷங்கள் நீங்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிட்டும்.
  ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம் கேயூரஹாராதிபி:
  திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம்
  அம்போஜாபயசக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
  ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
  சுப்ரமண்ய த்யானம்.

  பொதுப்பொருள்:

  சிந்தூரம் போல் சிவந்த வண்ணம் கொண்டவரே, சந்திரன் போன்ற பேரழகு முகத்தவரே, தோள்வளை, முக்தாஹாரம் முதலான திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, ஸ்வர்க்க போகம் முதலான சுகத்தை அளிப்பவரே, தாமரைப்பூ, அபயஹஸ்தம், சக்திவேல், சேவல் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரே, சிவந்த வாசனைப் பொடிகளால் நறுமணம் கமழ்பவரே, பக்தி செலுத்துவோரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.
  Next Story
  ×