என் மலர்

  ஆன்மிகம்

  தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் காட்சி.
  X
  தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் காட்சி.

  திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் அணிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பாவாடை தரிசனமும் நடந்தது.
  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. பக்தர்கள் கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க அனுமதிக்கப் படாததையொட்டி நேற்று காலையில் கிரிவலத்தில் சட்ட தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

  இந்த நிலையில் வழக்கம்போல சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் உக்ரம் (கோபம்) தணிக்கும் பொருட்டாக பாவாடை தரிசனம் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி 100 படி அரிசி சாதம் படைத்து அதில் 20 லிட்டர்தயிர் கலந்து கருவறையில் முருகப்பெருமானுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது

  இதனைத்தொடர்ந்துசிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு "தங்க கவசம்" அணிவிக்கப்பட்டது. இதேபோல கருவறையில் அமைந்து உள்ள சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர் ஆகிய விக்ரங்களுக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப் பட்டது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அங்கு பெரும்பாலான பக்தர்கள் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தனர். இந்த கோவிலை பொறுத்தவரை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 5 மணிக்குமேல் இரவு 9 மணி வரையிலும், தமிழ் புத்தாண்டு அன்றும் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிப்பது. வழக்கம். அதன்படி கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சாமி கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆலய பணியாளர்கள், பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாண விருந்து அன்னதானம் பார்சலாக வழங்கப்பட்டது. இரவு சாமி-அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடந்தது.காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.
  Next Story
  ×