search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "russian woman"

  பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய பெண் மீண்டும் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலையில் ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

  இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ரஷிய பெண் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

  இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீலகண்டன், பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தேவநாதன் விசாரணை நடத்தினார்.

  மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக ரஷிய பெண் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
  அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #ElenaAlekseevnaKhusyaynova #RussianWoman
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக்குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலும் ரஷிய தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

  இது தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா (வயது 44) என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அமெரிக்க அரசியல் அமைப்பில் குழப்பம் விளைவிக்கும் ஒரு திட்டத்துக்கான தலைமை கணக்காளராக இந்தப் பெண் பணியாற்றி வருகிறார்.2016-ம் ஆண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த எந்த வியூகத்தையும், தொழில் நுட்பத்தையும் ரஷியா பயன்படுத்தியதோ, அதையே இப்போதும் பயன்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க அரசின் கொள்கையிலும், வாக்காளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷியா, சீனா, ஈரான், மற்றும் சில நாடுகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை கூறுகிறது.ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடமும், அமெரிக்க கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் பிற நாடுகள் செயல்படுவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். #ElenaAlekseevnaKhusyaynova #RussianWoman 
  திருவண்ணாமலையில் கற்பழிக்கப்பட்ட ரஷிய இளம்பெண் பாம்பு கடி போதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை விசிறி சாமியார் ஆசிரமம் அருகே உள்ள அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்த ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் அலினா (22) கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து, சுய நினைவை இழந்துகிடந்த ரஷியப்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

  அபார்ட்மெண்ட்டுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன், ரஷிய நாட்டு தூதரக விசா சரிபார்ப்பு அதிகாரி டென்னிஸ், எஸ்.பி. பொன்னி ஆகியோர் சிகிச்சை பெறும் ரஷியப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

  இதைத்தொடர்ந்து ஆரணி மாஜிஸ்திரேட் மகாலட்சுமி, ஆஸ்பத்திரியில் அலினாவிடம் 2 மணி நேரம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார். வீடியோவாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து, ரஷியப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் அபார்ட்மெண்ட் நிர்வாகி பாரதி (31) மற்றும் அவரது அண்ணன் நீலகண்டன் (35), இவர்களுடைய நண்பர்கள் மணிகண்டன் (37) மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் (30) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

  இதுகுறித்து, எஸ்.பி. பொன்னி கூறியதாவது:-

  ரஷிய இளம்பெண் அலினா ஜூன் 3-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். வதோரா, ராஜ்பூர், மும்பை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு மும்பையில் இருந்து சென்னை வந்தார்.

  அங்கிருந்து கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். முதலில் அவர் தங்கிய விடுதி அறைக்கு வாடகை அதிகம் வசூலித்தனர். அதன் பிறகு தான், கற்பழிக்கு குற்றவாளியான பாரதியின் அபார்ட்மெண்ட்டிற்கு கடந்த 12-ந் தேதி சென்றார். 16-ந் தேதி காலை மயக்க நிலையில் கிடந்த அலினா மீட்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  இதையடுத்து, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். சுயநினைவு திரும்பிய அலினா, விடுதியில் தங்கிய 3 நாளில் அபார்ட்மெண்ட் நிர்வாகி பாரதி 2 முறை மிரட்டி கற்பழித்துள்ளார்.

  நிர்வாண நிலையில் இருந்தபோது 2 முறை குளியல் அறைக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டியதாகவும், அப்போது நீலகண்டன் மற்றும் மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 3 பேரும் மானபங்கம் செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் ஐ.பி.சி. 376, 354 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷிய பெண், சொந்த நாடு திரும்புவதற்குள், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

  குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுதரப்படும். வெளிநாட்டினர் தங்கும் விபரங்களை தெரிவிக்காத, ஒரு லாட்ஜ் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

  இந்த நிலையில், ரஷிய இளம்பெண் அலினாவின் செல்போனை ஆராய்ந்த போது, லெஸ்பியன் படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் போதை பொருட்களும் அவர் தங்கியிருந்த அறையில் கண்டெடுக்கப்பட்டது.

  ரஷியப்பெண் சுயநினைவு இல்லாமல் கிடந்ததற்கு அவர் உச்சக்கட்ட போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் எதுபோன்ற போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

  அதே நேரத்தில், அவர் பாம்பு கடி (ஸ்நேக் பைட்) போதையில் இருந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பாட்டிலில் ஒரு குட்டி பாம்பு போடப்பட்டிருக்கும். அந்த பாட்டிலின் மேல் பகுதியை நாக்கின் மீதுவைத்து மூடியை திறந்தால், பாம்பு தலையை நீட்டி நாக்கில் கொத்தும்.

  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விட, பாம்பு கடி ராஜ போதையை உண்டாக்கும். இந்த போதை தலைக்கேறியதும் கிறுகிறுத்து போவார்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு போதையில் சுருண்டு கிடப்பார்கள்.

  பாம்பு கடி போதை வெளிநாடுகளில் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ரஷிய இளம்பெண்ணும் பாம்பு கடி போதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×