என் மலர்
நீங்கள் தேடியது "Mamallapuram murder"
ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாலதி. இருவரும் சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பணிகள் செய்து வந்தனர்.
அப்போது அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் மாலதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதை அறிந்த நாகராஜ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து கள் விருந்து எனக்கூறி ஜெகனை மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்த வழக்கில் மாமல்லபுரம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஆந்திராவுக்கு தப்பி ஓடிய நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
நெய்வேலியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (வயது 24). சென்னை ஓரகடத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
மாமல்லபுரம் அடுத்த திருவிருடந்தை சவுக்கு தோப்பு பகுதியில் கடந்த மாதம் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக பாண்டிச்சேரியை சேர்ந்த சிவசங்கரன், மதியரசன், முகிலன், மோகன்ராஜ், ஆகிய 4பேர் விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்தனர்.
இவர்களின் கூட்டாளியான ஜெயராமனை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். ஜெயராமன் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
பாண்டிச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்துவரும் அருண் பிரகாசின் அக்காள் சுந்தரவள்ளி கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் அதே பகுதியை மோகன்ராஜிக்கும் காதல் ஏற்பட்டு கணவன் மனைவியாக வாழ்ந்தனர். நாளடைவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
பின்னர் சுந்தரவள்ளி தனது மகள்களுக்கு மோகன்ராஜ் பாலியல் தொந்தரவு செய்ததாக ரெட்டியார் பாளையம் போலீசில் பொய் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்து காலாபேட்டை சிறையில் அடைத்தனர்.
இதற்கு முழு காரணமாக செயல்பட்டது அருண்பிரகாஷ் என்பது தெரிந்தது. ஒரு மாதம் கழித்து ஜெயில் இருந்து மோகன்ராஜ் வெளியே வந்ததும், அருண்பிரகாசை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
இதற்காக ஒரக்கடத்தில் இருந்த அருண்பிரகாசை சமாதானம் பேசுவதற்காக கோவளம் வர வைத்தோம். அவர் வந்ததும் மது அருந்தியே பேசலாம் என திருவிடந்தை சவுக்கு தோப்புக்குள் அழைத்துச் சென்றோம். அங்கு எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது.
பின்னர் நாங்கள் 4 பேர் அருண்பிரகாஷின் கை கால்களை பிடித்தோம். சிவசங்கரன் அருகே கிடந்த பாறாங்கல்லை தூக்கி அருண் பிரகாசின் முகத்தை போட்டான். இதில்அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இவ்வாறு ஜெயராமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.






