search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கு -  ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன் ஆஜரானார்
    X

    லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கு - ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன் ஆஜரானார்

    லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா இன்று ஆஜரானார். #RobertVadra
    புதுடெல்லி:

    பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இவ்விவகாரத்தில் ராபர்ட் வதேரா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வரும் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ராபர்ட் வதேரா கலந்து கொள்வார். அவருக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார்.



    இதனையேற்ற நீதிமன்றம் வரும் 16-ம் தேதி வரை ராபர்ட் வதேராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து, ஏற்கனவே கோர்ட்டில் அளித்த வாக்குறுதியின்படி ராபர்ட் வதேரா தனது வழக்கறிஞருடன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். #RobertVadra
    Next Story
    ×