என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரப்பன அக்ரஹாரா சிறை"

    • 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும்.
    • விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவில், பரப்பன அக்ரஹாரா சிறை உள்ளது. இங்கு 5,500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர்.

    ரேணுகாசாமி கொலை வழக்கில் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் சொகுசு வசதி பெற்றதுடன், செல்போனில் பேசியது, நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்த படியே டீ குடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

    பரப்பன அக்ரஹாரா சிறையில் கற்பழிப்பு வழக்கு குற்றவாளியான உமேஷ் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 20 கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அவற்றில் 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும். இந்த வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் உமேஷ் ரெட்டி செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சிறைக்குள் செல்போனில் பேசியபடி அங்கும், இங்கும் சுற்றி திரிகிறார்.

    அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் டி.வி. இருப்பதும் தெரியவந்துள்ளது. உமேஷ் ரெட்டி 2 விதமான செல்போன்களில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் 2 செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. உமேஷ் ரெட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவின் காதலன் தருணும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் செல்போனில் பேசியபடி சிறையில் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    அதில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஜூகாத் கமீத் ஷகீலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூகாத் செல்போனில் பேசியபடி சிறைக்குள் சுற்றி வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுபற்றி நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    ஆனால் அந்த வீடியோவை தான் பார்க்கவில்லை என்றும், அதுபற்றி அதிகாரிகளிடம் தகவல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார். அதே நேரத்தில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்று விட்டார்.

    இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த், மேற்கண்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறையை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    அப்படி இருந்தும் கைதிகள் எப்படி செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஜாமரால் தங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் சிறையில் உள்ள கைதிகள் செல்போன்களில் பேசுவது எப்படி என்பது தெரியவில்லை? என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33) பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் கர்நாடகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவானது. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தார்.

    பின்னர் கடந்த மாதம் 31-ந் தேதி ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரை 6-ந்தேதி முதல் 10-ந்தேதி (நேற்று) வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூரு பசவனகுடியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கும், அவரை போலீசார் அழைத்து சென்றார்கள்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் அழைத்து சென்றபோது வீட்டின் முதல் மாடியில், அவரது தாய் பவானி ரேவண்ணா இருந்தார். ஆனாலும் தாயை சந்திக்கவும், அவருடன் பேசுவதற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணா முன்ஜாமீன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நேற்று மதியம் 3 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினா்.

    இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஏற்கனவே பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கடத்தியதாக, அவரது தந்தையான முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா இதே பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 6 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×