search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court custody"

    • காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாக கூறி டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.

    பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கப்பட்ட நிலையில், அவரை வரும் ஜூலை 29ஆம் தேதி வரை

    நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையே ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி அல்லி ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 23ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    • செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
    • மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.

    திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து வரும் நிலையில், நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    நேற்று புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை இன்று நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

    இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளி வைக்க முடியாது எனக் கூறி செந்தில்பாலாஜி மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.

    குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்கும் நோக்கில், அவகாசம் கோரப்படுகிறது என ED தரப்பு தனது வாதத்தை வைத்துள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆகஸ்ட் 2ம் தேதி செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார்.
    • விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ரூ 1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று உத்திர உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    • ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல்.
    • பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார்.

    மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார். 

    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மூன்றாவது வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அவரைக் காவலில் எடுத்தது.
    • தற்போது நீதிமன்றம் ஜூலை 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஆஜர்படுத்தப்பட்டபோது எஸ்ஐடி மேற்கொண்டு விசாரணை நடத்த பிரஜ்வாலின் காவலிலை நீட்டிக்க கோரிக்கை வை்ககவில்லை. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விசாரணையின் போது, இரைப்பை பிரச்சினைகள் குறித்து பிரஜ்வால் புகார் செய்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, அவரது உடல்நிலையை கண்காணிக்க எஸ்ஐடி அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.

    • பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது.

    கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6ம் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் இன்று மாலை நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×