என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "brutal murder"
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.
- வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
அக்கட்சி தலைவர்களின் வீடுகளுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடினர். பின்னர் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 29-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குமில்லா பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஷா ஆலமின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சத்கிராவில் பல அவாமி லீக் தலைவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டு சூறை யாடப்பட்டது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஷபிகுல் இஸ்லாம் ஷிமுல் எம்.பி.யின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் 4 பேர் இறந்தனர்.
போக்ராவில் உள்ள அவாமி லீக்கின் இளைஞர் பிரிவான ஜூபோ லீக்கின் 2 தலைவர்களின் உடல் களை கண்டெடுத்தனர். லால்மோனிர்ஹாட்டில், மாவட்ட அவாமி லீக் இணைப் பொதுச் செயலா ளர் சுமன் கான் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அங்கு 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
- ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
- தடுக்க வந்தவரை தள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார்.
மகாராஷ்ர மாநிலம் மும்பை அருகே வசாயின் கிழக்கு பகுதியில் பரபரப்பான சாலையில் 28 வயது உள்ள ரோஹித் தனது முன்னாள் காதலி ஆர்த்தி ஸ்பேனரால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் யாதவ், தனது முன்னாள் ஆர்த்தி யாதவ் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டதையடுத்து, ஸ்பேனருடன் அவரைத் துரத்தி கொண்டு சென்றுள்ளார். இந்த தாக்குதல் சாலையின் நடுவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிசிடிவி காட்சிகளின்படி, ரோஹித் ஆர்த்தியை ஸ்பேனரால் துரத்துவதும், அவரது தலை மற்றும் மார்பில் பலமுறை அடிப்பதும் போல் உள்ளது. அந்த வீடியோவில் ஆர்த்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் அப்போது ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ரோஹித்தை தடுக்க முயன்றார். இருப்பினும், தடுக்க வந்தவரைதள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார். இதை அடுத்து அந்த நபர் பின்வாங்கி செல்கிறார். அதைத் தொடர்ந்து யாரும் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை.
இந்த கொடிய சம்பவத்தை சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியிருக்கிறது. அதில் ரோஹித் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் உடலில் ஏறி நின்று கொண்டு, ஸ்பேனரை கையில் பிடித்துக்கொண்டு குனிந்து அப்பெண்ணின் முகத்தை பிடித்துக்கொண்டு `எனக்கு ஏன் அப்படி செய்தாய்... ஏன் அப்படி செய்தாய்?' என்று பிணத்துடன் பேசினான். பின்னர் மீண்டும் ஒரு முறை ஓங்கி ஸ்பேனரால் அடித்து விட்டு, ரத்தம் படிந்த ஸ்பேனரை தூக்கிப்போட்டுவிட்டு கூட்டத்தில் நடந்து சென்றான்.
இது குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறு வருட நீண்ட உறவைத் தொடர்ந்து அவர்கள் பிரிந்ததே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று ஊகிக்கப்படுகிறது.
வசாயின் கிழக்கு சின்ச்பாடா பகுதியில் அதிகாலையில் ஆர்த்தி யாதவ் வேலைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து ரோஹித் கைது செய்யப்பட்டுள்ளார்.
- உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
- ருக்ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புதுடெல்லி:
தென்மேற்கு டெல்லியில் துவாராகாவின் ராஜபுரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகின்.
இவர் அப்பகுதியில் உள்ள டப்ரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகள் ருக்ஷாரை (வயது26). கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. மாயமான எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் ருக்ஷா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். பிளாட்டுக்குள் நுழைந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய போது ருக்ஷார் கொலை செய்யப்பட்டதும், அவரது உடல் அலமாரியில் வீசப்பட்டதும் தெரியவந்தது.
அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. கழுத்தை கத்தியால் நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அவரது உடல் கதவு அருகே உள்ள அலமாரியில் அமர்ந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் அங்கித்சிங் கூறினார்.
இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
ருக்ஷார், குஜராத்தின் சூரத் பகுதியை பூர்வீகமாக கொண்ட விபால் டெய்லர் என்ற வாலிபருடன் கடந்த 1½ மாதங்களாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இருவரும் அந்த வீட்டில் திருமணம் செய்யாமல் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்ஷார் அவரது தந்தைக்கு போன் செய்துள்ளார்.
அப்போது தனது நண்பரான விபால் டெய்லர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளாராம். எனவே அவர் ருக்ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் விபால் டெய்லரை தேடி வருகின்றனர்.
- பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
- வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சமுத்திரக்கனி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தார். இதனையடுத்து தனது மூத்த மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2-வது மகளை வருசநாடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து கொடுத்தார்.
2-வது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியிலேயே வீடு எடுத்து சமுத்திரக்கனி தங்கி இருந்தார். பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டு முன்பு சமுத்திரக்கனி ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார்.
அந்த பகுதிக்கு பால் கறக்கச் செல்லும் தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கை, கால், மார்பு என பல இடங்களில் அரிவாளால் வெட்டி கொடூரமான நிலையில் சமுத்திரக்கனி கிடந்தார்.
அவரை சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அதே பகுதுயைச் சேர்ந்த சொக்கர் என்பவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரையில் கொத்தனார் கல்வீசி தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61), கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. மோகனும், ஆட்டோ டிரைவர் வடிவேல் (43) என்பவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று வடிவேல் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி மோகன் வீட்டின்மீது மோதியது.
இதனை மோகன் தட்டி கேட்டார். அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி விஜி கணவருக்கு ஆதரவாக பேசினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், அவரது மனைவி விஜி ஆகியோர் கல்வீசி மோகனை கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மோகன் படுகாயம் அடைந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மோகன் மனைவி சிவகாமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோகனை ஆட்டோ டிரைவர் வடிவேல், அவரது மனைவி விஜி ஆகிய 2 பேரும் கல்வீசி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொத்தனாரை கொடூரமாக கொலை செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்