16 வயது சிறுமி கொடூர கொலை- கைதான 6 பேருக்கும் நீதிமன்ற காவல்

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்து உள்ளார்.சிறுமி கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
16 வயது சிறுமி கொடூர கொலை- கைதான 6 பேருக்கும் நீதிமன்ற காவல்
Published on

சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.

நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்து உள்ளார்.

நேற்று முன்தினம் தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை முடிந்து குளிக்கச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சிறுமியின் உடலில் சிகரெட் காயங்கள் இருந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தம்பதி உள்பட 6 பேருக்கும், வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முகமது நிஷாத், நாசியா, லோகேஷ், ஜெயசக்தி, மகேஸ்வரி மற்றும் சீமா பேகம் ஆகிய 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com