என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வீசி தாக்குதல்"

    • இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது.
    • எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது.

    பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    திக்ரி சட்டசபை தொகுதியில் இந்துஸ்தானி அவாம் கட்சி போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் அனில்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்துஸ்தான் அவாம் கட்சி வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அவர் வாக்கு சேகரிப்பதற்காக கயா மாவட்டத்துக்கு சென்றார். திதோரா கிராமத்தில் பிரசாரம் செய்ய சென்ற போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. அதைத் தொடர்ந்து கிராம மக்களும் தாக்கினார்கள்.

    உள்ளூரில் சாலை அமைத்து தருமாறு அந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தராததால் ஆத்திரமடைந்து கற்கள் மற்றும் செங்கற்களால் கடுமையாக தாக்கினார்கள்.

    இந்த தாக்குதலில் எம்.எல்.ஏ.வுக்கு காயம் ஏற்பட்டது. கை மற்றும் தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் அவரைக் காப்பாற்றினார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டது. கிராம மக்களின் தாக்குதலில் எம்.எல்.ஏ.வின் கார் சேதமானது.

    இந்த தாக்குதல் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கற்களை வீசிய சிலரை போலீசார் கைது செய்தனர்.

    • அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
    • மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.

    சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    இதில், மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

    மதிமுக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரையில் கொத்தனார் கல்வீசி தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61), கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. மோகனும், ஆட்டோ டிரைவர் வடிவேல் (43) என்பவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்களுக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று வடிவேல் ஓட்டி வந்த ஆட்டோ நிலை தடுமாறி மோகன் வீட்டின்மீது மோதியது.

    இதனை மோகன் தட்டி கேட்டார். அப்போது அங்கு வந்த வடிவேல் மனைவி விஜி கணவருக்கு ஆதரவாக பேசினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், அவரது மனைவி விஜி ஆகியோர் கல்வீசி மோகனை கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மோகன் படுகாயம் அடைந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மோகன் மனைவி சிவகாமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மோகனை ஆட்டோ டிரைவர் வடிவேல், அவரது மனைவி விஜி ஆகிய 2 பேரும் கல்வீசி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொத்தனாரை கொடூரமாக கொலை செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×