ம.தி.மு.க. தலைமை அலுவலகம் மீது மர்ம நபர் கல்வீசி தாக்குதல்

அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.
ம.தி.மு.க. தலைமை அலுவலகம் மீது மர்ம நபர் கல்வீசி தாக்குதல்
Published on

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில், மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

மதிமுக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com