search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FERA case"

    சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக இயலவில்லை.
    சென்னை:

    ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
     
    ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.

    அன்னிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மே மாதம் 13-ம் தேதி (இன்று) சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது.

    பின்னர் பாதுகாப்பு கருதி அவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா ஆஜராகவில்லை.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் கணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்துள்ளார்.
    சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பெரா வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #TTVDinakaran #FERACas
    புதுடெல்லி:

    டிடிவி தினகரன் கடந்த 1996ம் ஆண்டு  இங்கிலாந்தை சேர்ந்த பர்க்லேஸ் வங்கி மூலம் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற  நிறுவனத்துக்கு 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலர்  முதலீடு செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு (பெரா) பதிவு செய்தது.

    இந்த வழக்கு சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20  ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு  விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டது.

    இதற்கிடையே வழக்கு தொடர்பான ஆவணங்களை  டிடிவி தினகரனுக்கு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது.



    இவ்வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தாலும், விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    அத்துடன், டிடிவி தினகரன் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறையின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, டிடிவி தினகரனுக்கு  நோட்டீஸ் அனுப்பினர். #TTVDinakaran #FERACase
    ×