என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஸ்தூரி"

    • தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர்.
    • காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

    மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரையை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய 3 பேர் காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 3 பேருக்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஆளும் திமுக அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜகவை சேர்ந்த நடிகை கஸ்தூரி, பெண்கள் நேரங்கெட்ட நேரத்தில் வெளியில் சுற்றக்கூடாது. எவ்வளவோ பாதுகாப்பான இடங்கள் இருக்கும்போது வெளியில் ஏன் செல்ல வேண்டும்.

    பெண் மட்டுமல்ல, ஒரு ஆண் கூட இரவில் வெளியில் சுற்றக்கூடாது. ஒருவேளை பேசியே ஆக வேண்டும் என நினைத்தால் ரூம் போட்டு பேசுங்கள்" என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.    

    • திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது.
    • திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது:-

    வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலுங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்து விட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு தமிழகத்தில் ஒன்றுமே செய்யவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க.வுக்கு பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் இங்கே தமிழகத்தில் இனம், பிரிவினை என ஒவ்வொரு ஆயுதமாக கையில் எடுத்து வருகின்றனர்.

    தமிழ் பற்றை பேசாமல் திராவிடத்தை முன்னிறுத்தி தி.மு.க. பேசுகிறது.

    ஆனால் தமிழ் பற்று, தேசப்பற்றை பேசும் பொறுப்பு நமக்கு உள்ளது. கலை கலாச்சார பிரிவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    இங்கே திரையுலகில் பூதம் பிடித்துள்ளது. திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது. திரைத்துறையை விடுவிக்க என்ன வழியோ அதனை செய்ய வேண்டும்.

    இங்கே ஒரு சிறிய படத்தை எடுத்தால் அதனை ரிலீஸ் செய்யும் வரை போதும் போதும் என்றாகி விடுகிறது. தீபாவளிக்கு கூட நல்ல படம் வரவில்லை. நல்ல படம் வருவதற்கு ஒருவரை மட்டுமே ஏன் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்? திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும். அதற்கு பா.ஜ.க. கலை கலாச்சார அணி முயற்சி செய்ய வேண்டும் என பேசினார். 

    • பா.ஜ.க. பிரமுகரான நடிகை கஸ்தூரி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • அதன்பின் பேசிய அவர் விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது என்றார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார்.

    அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்களே த.வெ.க. தலைவர் விஜய் பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அவருடன் இல்லை.

    கரூரில் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பம்கூட அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும்.

    விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது. ஆந்திர மாநில துணை முதல் மந்திரியும், நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
    • மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த நடிகை கஸ்தூரி மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. எங்களுடைய ஒவ்வொருவர் மனதிலும் நடக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், மார்தட்டி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையில் இன்று நடைபெறுவது அரசியல் விழா அல்ல. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் மாநாடு.

    கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவது அரசியல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமா? மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தல் பொன் சட்டியா? தி.மு.க. நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

    பவன் கல்யாண் கட்சித் தலைவராக இந்த மாநாட்டிற்கு வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது மிகப்பெரிய பெருமை. அதை தி.மு.க. அரசு ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வது தான் அக்மார்க் மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

    முருக பக்தர்கள் மாநாடு குறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முருகன் தமிழ்க்கடவுள் தானே. அவருடைய மூதாதையர்கள் தமிழர்கள் தானே? அவர் தமிழனாக நினைக்கவில்லையா என தெரியவில்லை.

    மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோவிலுக்கு நற்பணி செய்ததாக தான் வரலாற்றில் உள்ளது. விஜய் சரியான பாதையை பயணித்து வருகிறார். வெற்றி என்பது கட்சியின் பெயரில் உள்ளது. அதை வாழ்த்தாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
    • DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

     

    இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் அளித்த பேட்டியில் "'டிடி நெக்ஸ்ட் லெவல்'ல என் அம்மா அப்பாவா கஸ்தூரியும் நிழல்கள் ரவியும் படம் முழுவதும் வர்றாங்க. தங்கையாக யாஷிகா ஆனந்த். கஸ்தூரி மேடம்கிட்ட அம்மா கேரக்டர்ல நடிக்கணும்னு கேட்டதும், 'என்னது! நான் சந்தானத்துக்கு அம்மாவா?'ன்னு ஷாக் ஆனாங்க. 'கதையைக் கேட்டுட்டு முடிவைச் சொல்லுங்க'ன்னு கதையைச் சொன்னதும் நடிக்க சம்மதிச்சிட்டாங்க. அவங்க கதாபாத்திரத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைய இருக்கும்." என கூறியுள்ளார்.

    • இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை.
    • மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்?

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை. மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்? கணக்கு கஷ்டம் என்றால் அதனை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?

    இலகுவான முறையில் மாற்றியமைக்கலாமே தவிர கற்காமல் விடக்கூடாது என்று கூறினார். 

    • தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வலைதளங்களில் பரவியது.
    • இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு கவனம் பெற்று வருகிறது.

    தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது.

    அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை பீகார் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன.


    கஸ்தூரி

    இதைத்தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழகத்தில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. அதில், "வட நாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.


    • தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ஆதிபுருஷ் வெளியாக உள்ளது.
    • இப்படத்தில் பிரபாஸ் ராமரை போல் இல்லை, கர்ணனைப் போல இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து வெளியான போஸ்டர்களும் விமர்சனத்திற்கு உள்ளானது.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான இறுதி டிரெய்லரும் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    மேலும் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், கீர்த்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குனர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.


    கஸ்தூரி

    கஸ்தூரி

    இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தின் வாயிலாக கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். அதில், "ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு? குறிப்பாக பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
    • தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.


    செந்தில் பாலாஜி

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மருந்துவனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள்.

    செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


    செந்தில் பாலாஜி -மு.க.ஸ்டாலின்

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். அதில், "முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.

    கஸ்தூரியின் latest பழமொழிகள் இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக. பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும்" என்று பதிவிட்டுள்ளார்.


    கஸ்தூரி பதிவு

    மேலும் மற்றொரு பதிவில், "செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார். ரெய்டு போகும்போது ED IT அதிகாரிகளோடு டாக்டரும் அவசியம். இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பலவீனமான இதயம் உள்ளது. சிறைச்சாலைகளில் இதயத்திற்கு என சிறப்பு சிகிச்சை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காவலர்கள் CPU இல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். போலீஸ் ஜீப்பிற்கு பதிலாக, ஆம்புலன்ஸ் பயன்படுத்துவது நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • நடிகர் விஜய் இன்று மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • இந்த நிகழ்வானது சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


    மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய விஜய்

    இந்நிலையில், நடிகை கஸ்தூரி, விஜய் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். ஜூன் 22-இல் பெரிதாக எதிர்பார்க்கலாமா..?" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • நடிகை கஸ்தூரி அவ்வப்போது இணையத்தில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
    • அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. 'ஆத்தா உன் கோயிலிலே' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சின்னவர், புதிய முகம், அமைதிப்படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார்.


    சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை கஸ்தூரி ஒரு சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார். இவரின் நடனத்திற்கு பலரும் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பு வளையத்துக்குள் இருந்து வருகிறார். அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.


    இந்நிலையில், இவர் நடிகர் அஜித் குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு... அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    ×