தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்கவேண்டும்: நடிகை கஸ்தூரி

பா.ஜ.க. பிரமுகரான நடிகை கஸ்தூரி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.அதன்பின் பேசிய அவர் விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது என்றார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்கவேண்டும்: நடிகை கஸ்தூரி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்களே த.வெ.க. தலைவர் விஜய் பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அவருடன் இல்லை.

கரூரில் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பம்கூட அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும்.

விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது. ஆந்திர மாநில துணை முதல் மந்திரியும், நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com