'என்னது! நான் சந்தானத்துக்கு அம்மாவா?'ன்னு ஷாக் ஆனாங்க கஸ்தூரி - சந்தானம்

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது
'என்னது! நான் சந்தானத்துக்கு அம்மாவா?'ன்னு ஷாக் ஆனாங்க கஸ்தூரி - சந்தானம்
Published on

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் அளித்த பேட்டியில் "'டிடி நெக்ஸ்ட் லெவல்'ல என் அம்மா அப்பாவா கஸ்தூரியும் நிழல்கள் ரவியும் படம் முழுவதும் வர்றாங்க. தங்கையாக யாஷிகா ஆனந்த். கஸ்தூரி மேடம்கிட்ட அம்மா கேரக்டர்ல நடிக்கணும்னு கேட்டதும், 'என்னது! நான் சந்தானத்துக்கு அம்மாவா?'ன்னு ஷாக் ஆனாங்க. 'கதையைக் கேட்டுட்டு முடிவைச் சொல்லுங்க'ன்னு கதையைச் சொன்னதும் நடிக்க சம்மதிச்சிட்டாங்க. அவங்க கதாபாத்திரத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைய இருக்கும்." என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com