அன்பறிவ் இயக்கும் KH237 படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகை

கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
அன்பறிவ் இயக்கும் KH237 படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகை
Published on

அண்மையில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இயக்கியவர்களாவர்.

இந்நிலையில் படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com