search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vadivelu"

  • பவதாரிணி நேற்று காலமானார்.
  • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


  கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், நடிகர் வடிவேலு வருதத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாரீசன் படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்துவிட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்றும் புரியவில்லை. 47 வயது பெண். அவர் இறந்த செய்தி நெஞ்சமெல்லாம் நொறுங்கிவிட்டது.


  பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என அழுதபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.


  • வடிவேலு மற்றும் பகத் பாசில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்கள்.
  • இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.

  மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாசில் நடிக்கிறார்.

  தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.


  மாரீசன் போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மாரீசன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளது. மான் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் 'இன்னைக்கு வேட்டை ஆரம்பம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.
  • புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியீடு.

  தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது 98-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிமுக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.

  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.


  விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இதன் தலைப்பு, ரிலீஸ் மற்றும் இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

  • சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
  • மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம்.

  சென்னிமலை:

  ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

  அதில் அவர் கூறியதாவது:- 2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், இயற்கை பேரிடம் இல்லாத ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும், கொங்கு மண்டலம் ஆன்மீக பூமி, விவசாயம் நிறைந்த பூமி. புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம்.

  சென்னிமலைக்கு வரவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. சென்னிமலை புண்ணிய பூமி, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலம், வரும் ஆண்டில் விவசாயம் செழிக்க வேண்டும்.

  அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. நான் நல்ல வாக்காளர், நல்ல ஆட்சி அமைய பாடு பட வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் அரசியல்வாதி தான். நல்ல ஆட்சி ஆட்சி அமைய வாக்களிப்பேன்.

  இதுவரை எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு, நடிகர் வடிவேல் நேரில் அஞ்சலி செலுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம். அவர்களுக்குள் என்ன மன கசப்பு என தெரியவில்லை.

  விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். தவறு இல்லை. அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

  • நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார்.
  • பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார்.

  கே.பாக்யராஜ் நடித்த பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூர் மாப்ளே, வின்னர், வசீகரா, ஏய், வேலாயுதம், என்னைப் பார் யோகம் வரும் உள்பட சுமார் 270 படங்களில் நடித்துள்ளார்.  நடிகர் போண்டா மணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றார். 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் பதிவு செய்துள்ளார்.

  பல்லாவரம் பொழிச்சலூர் வாடகை வீட்டில் வசித்தபடி சிகிச்சை பெற்று வந்த போண்டா மணி வறுமையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு திரை பிரபலங்கள் பலர் உதவி செய்து வந்தனர். இதையடுத்து நடிகர் போண்டா மணி நேற்றிரவு 11 மணிக்கு வீட்டில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டாமணியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


  இந்நிலையில், போண்டா மணிக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் விஜயகாந்த் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.

  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


  • 21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது.
  • இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

  21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

  இந்த விழாவில் இந்த ஆண்டு போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது.  இதில் சிறந்த படமாக தேர்வான அயோத்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.


  பிரீத்தி அஸ்ரானி

  மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக பிரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி.
  • இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

  பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

  இந்த நிலையில், இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார்.  அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட சென்றபோது, இயக்குனர் மாரி செல்வராஜூம் உடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகின. மேலும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன.

  இந்த நிலையில் நடிகர் வடிவேலு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "அது அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு, பள்ளம் எங்கு இருக்கிறது என அவருக்குத் தான் தெரியும். ஏன் போகக்கூடாதா? அவர் ஊரில் அவர் போகாமல், வேறு யார் போவது? அவர் என்ன அமெரிக்காவில் இருந்து வந்திருக்காரா?," என்று தெரிவித்தார். 

  • நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
  • வடிவேலு ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

  தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.


  இதைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நடித்து பாராட்டை பெற்றார். தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படத்திலும் நடித்து கவனம் பெற்றார்.

  இந்நிலையில், நடிகர் வடிவேலு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


  இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இசை நிகழ்ச்சியில் நடந்த தவறுகளுக்கு வருந்துவதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தார்.
  • டிக்கெட் நகலை சரிபார்த்து ரசிகர்களுக்கான கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.

  தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து டிக்கெட் நகலை சரிபார்த்து ரசிகர்களுக்கான கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு நிகழ்ச்சியில் நடந்த தவறுகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன். அங்கு மக்கள் பட்ட கஷ்டங்களை நானும் பார்த்தேன். ஏ.ஆர்.ரகுமான் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசத்தின் உதாரணம் இந்த கோபம். ஏ.ஆர்.ரகுமானை தவறாக நினைக்காதீர்கள்.


  அவர் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் உள்ளார். இசையில் கவனம் செலுத்தியதால் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அவர் கவனம் செலுத்த தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். மக்கள் கோபம் கொள்ளாமல் பொறுமை காக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமானை யாரும் வெறுத்துவிடாதீர்கள். அவர் பணத்திற்காக மக்களை ஏமாற்றுபவர் அல்ல. நான் எதும் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என்று பேசினார்.

  • நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன், காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
  • ஜெகதீஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

  தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனத்தில் வசித்து வருகின்றனர். இவரது இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52). ஜவுளி வியாபாரம் பார்த்து வந்த இவர், காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

  கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் நோயின் பிடியில் இருந்து அவர் விடுபடவில்லை. தொடர்ந்து ஜவுளி வியாபாரத்தையும் கவனிக்க முடியாமல் வீட்டில் முடங்கினார்.

  இதற்கிடையே மதுரையை அடுத்த விரகனூரை அடுத்த ஐராவதநல்லூரில் மந்தையம்மன் கோவில் பின்புறமுள்ள ஒரு குடிசை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் இன்று காலை காலமானார். இதுபற்றிய தகவல் நடிகர் வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலமான ஜெகதீஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். மறைந்த ஜெகதீஸ்வரன் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.