'மாரீசன்' படக்குழுவுக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு!

வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவை பாராட்டியுள்ளார்.
'மாரீசன்' படக்குழுவுக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு!
Published on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

அவர்

"வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளது. அவர் உடைந்த அந்த தருணத்தில்... ஆஹா... என்ன ஒரு அற்புதமான நடிகர் என்பதை காட்டிவிட்டார்.

ஃபகத் ஃபாஸில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அருமையான படத்தை கொடுத்த இயக்குநர் சுதீஷ் சங்கர் மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுகள்!"

X

Maalai Malar
www.maalaimalar.com