என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தரா டிராவல்ஸ்"

    • சுந்தரா டிராவல்ஸ் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது
    • இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது

    இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.

    முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.

    படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.

    இந்நிலையில் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் இப்படம் ரீ-ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால இப்படம் அப்போது வெளியாகவில்லை. இப்போது புதுப்பொலிவுடன் இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

    ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
    • 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.

    இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.

    முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.

    படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.

    இந்நிலையில் தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சென்னை வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக புகார்.

    பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முரளி என்பவரை தாக்கியதாக, சுந்திரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், நடிகை ராதா மீதான புகார் தொடர்பாக சென்னை வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவர் மகன் தருண் மீதும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×