என் மலர்
நீங்கள் தேடியது "போலீசில் புகார்"
- ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சியாளருமாக இருப்பவர் ஏபிவி மேத்யூ.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏபிவி மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பரபரப்பான பரப்புரைக்கு மத்தியில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை மிஞ்சும் வகையில் பெங்களூருவில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு;-
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சியாளருமாக இருப்பவர் ஏபிவி மேத்யூ. இவர் சில பெண்கள் மற்றும் இளம் பெண்களுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொனனகுண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மேத்யூவிடம் 2500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதை அறிந்த மேத்யூ தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மகளிர் ஆணையத்திலும் மேத்யூ மீது இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கொனனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏபிவி மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.
- சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை:
அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் ராதிகா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது, பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்? கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடக்கிறார்களா? என அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.
எனவே சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார்.
- சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் செல்லும் சாலையில் காணை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 39). இவர் தனது வீட்டின் முன்பாக சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வியா பாரம் முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். அப்போது நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம நபர் கடையின் மேற்கூரையை பிரித்து கடைக்குள் புகுந்தார்.
இதனை அடுத்து கடையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார். இன்று காலை வழக்கம் போல் புவனேஸ்வரி கடையை திறக்கும் போது கடையில் திருடு போயிருப்பது தெரி யவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி இது குறித்து காணை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வங்கியில் இருந்து பேசுவதாக நம்பியதாக ராஜவேல் அந்த எண்களை மர்ம ஆசாமியிடம் கூறியுள்ளார்.
- ராஜவேலுவின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 665 ரூபாயை அந்த ஆசாமி அபேஸ் செய்துவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன்ஷிப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 61). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜவேலவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறிய ஒரு ஆசாமி ராஜவேலின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றின் ரகசிய எண்களை கேட்டு வாங்கியுள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக நம்பியதாக ராஜவேல் அந்த எண்களை மர்ம ஆசாமியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜவேலுவின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 665 ரூபாயை அந்த ஆசாமி அபேஸ் செய்துவிட்டார். வங்கியில் இருந்து செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி மூலம் பணம் பறிபோனதை அறிந்த ராஜவேல் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தாார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- தெய்வானை என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- சசிகுமார், அவரது பெற்றோர் மகேந்திரன், சாரதா, தெய்வானை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள நல்லப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி அனுபிரபா (வயது 25).
குடும்ப தகராறு காரணமாக அனுபிரபா தனது தாய்வீட்டுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகுமார் தெய்வானை என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அனுபிரபா புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சசிகுமார், அவரது பெற்றோர் மகேந்திரன், சாரதா, தெய்வானை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
- ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
திருப்பதி:
திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். சுமார் 2 மணி நேரம் கழித்து போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.
இதனை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி பள்ளி அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா புகைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து டீ கடைக்கு சென்ற மாணவியின் தாய் மகளுக்கு எதற்காக கஞ்சா விற்பனை செய்தாய் என தட்டிக்கேட்டார்.
அதற்கு அவர் உங்களுடைய மகள் தினமும் ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா அடித்துவிட்டு செல்வதாகவும், பணம் கொடுப்பதால் கஞ்சா கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் தாய் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதற்கு சந்திரகிரி எம்.எல்.ஏ சிவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் இன்றி கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்சியை குறை கூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
- சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார்.
- நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமம் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). கோவில் பூசாரி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவி 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தொரவி ஏரி நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடல்களை மீட்டு பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் காணாமல் போன கண்ணன் மற்றும் அவரது மனைவி பிரேமா என தெரியவந்தது. விசாரணையில் ஏரியில் தாமரைப்பூ பறிக்க சென்ற பொழுது ஆழமான பகுதி தெரியாமல் இறங்கியதில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கண்ணனுக்கு பிரதிக்க்ஷா (8) என்ற மகள் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
- வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள கூத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இவர் கடந்த 3-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது 30) என்ற வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை கெலமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானார்.
- கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை
விழுப்புரம்:
மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராம த்தைச் சேர்ந்தவர் குண சேகரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் புதுச்சேரி மாநிலம் வில்லி யனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். கல்லூரிக்கு காலை 7 மணிக்கு புறப்ப டும் இவர் மாலை 5.30 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவார்.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்ற ஆர்த்தி இரவு 7 மணியாகியும் வீடு திரும்ப வில்லை. கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை. இதை யடுத்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்து வந்துள்ளது.
- சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கஸ்தூரி (வயது 30) இவர்களுக்குதிருமணம் ஆகி11ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்துவந்துள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் 8ம்தேதி இரவு குடித்துவிட்டுஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கஸ்தூரிசண்டை போட்டுவிட்டு படுத்து தூங்கிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.
- வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
- கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
- இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில் ஒரு சிட்பண்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் ஆசையை தூண்டி தீபாவளி மற்றும் நகை சிட்பண்ட் நடத்தி வந்தது.
இதனை நம்பிய பொதுமக்கள் கட்டிய தொகைக்கு அதிகமாக வழங்கிய மளிகை பொருட்கள் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த முகவர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்து கட்டினர்.
அந்த சிட்பண்ட் நிறுவனம் அறிவித்தபடி தீபாவளி பரிசு பொருட்கள், நகைகள் அளிக்க முடியாததால் அந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட, ஏமாந்த முகவர்களும் பணம் கட்டிய வாடிக்கையாளர்களும் போராட்டம் நடத்தினர். அந்த நிறுவனம் கடந்த 10-ந்தேதிக்குள் பணம் கொடுப்பதாக உறுதி அளித்தது.
ஆனால் கூறியபடி பணம் கொடுக்கவில்லை. இதனை அறிந்த ஏமாந்த முகவர்களும், பணம் கட்டியவர்களும் 10-ம்தேதி, 11-ம் தேதி போராட்டம் செய்தனர். செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த நிறுவனம் மோசடி செய்து மதிப்பு ரூ.43 கோடியாகும். தொடர்ந்து தினமும் புகார் கொடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இது போன்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டு தொடங்கும் பொழுதே அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.






